Category: Daily Manna

முயற்சி தரும் நிறைவு

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – போன்ற வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கக்கூடிய சொற்களாக இருக்கிறது. இந்த சொற்களின் அடிப்படையான பொருள்: முயற்சி. முயன்றால் நாம் பெற முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சி தான், நமது விசுவாச வாழ்வின் அடித்தளம். அந்த முயற்சியைப் பற்றிப்பிடித்து விட்டால், நாம் இந்த உலகத்தில் அடைய நினைப்பதை நிச்சயமாக அடைய முடியும். நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறிகளாக வாழக்கூடாது. எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் நம்மை விட எத்தனையோ பேர் குறைகளோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது. அது நமது பார்வையில் நியாயமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, மிக உறுதியாக வாழ்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறார்கள். தடைகளையும், சோதனைகளையும் வலிமையோடு வென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்கு சிறந்த உதாரணங்களாக வாழ்வில்...

கடவுள் தாமே நீதிபதியாக வருகிறார்

திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தவர் மட்டும் அல்ல. அதனை பராமரிக்கிறவரும் கூட. இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கக்கூடியவரும் அவரே. கடவுள் இல்லையென்றால், பலருக்கு வாழ்க்கை நிச்சயம் கடுமையானதாகத்தான் இருந்திருக்கும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்து பலர், அதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அநீதி செய்வோர், தங்களது பலத்தால், அதிகாரத்தால் நேர்மையாளர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் ரூபா என்கிற கர்நாடாகாவைச் சேர்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்திருக்கிற அவலம் இந்த நாடறியும். இப்படி அநீதிகளுக்கு மத்தியில் நேர்மையாளர்கள் வாழ முடியுமா? என்றால், முடியும் என்பதை, இந்த பல்லவி வார்த்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் எப்போதும் நேர்மையாளர்களைக் காக்கின்றவராகவும், அநீதி செய்கிறவர்களை எதிர்த்து நிற்கிறவராகவும் இருக்கிறார். கடவுள் காலம் தாழ்த்தலாம். அது வெறுமனே காலம் தாழ்த்துவது அல்ல. மாறாக, அவர்கள்...

ஆண்டவரைப்பற்றிய அச்சம் தூயது

திபா 19: 9 ஆண்டவரைப்பற்றி நாம் அஞ்ச வேண்டுமா? கடவுள் நம்மை அன்பு செய்கிறார். நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். நம் அனைவர் மீதும் அதிக இரக்கம் காட்டி வருகிறார். அப்படியிருக்கிறபோது, ஏன் கடவுளுக்கு நாம் பயந்து வாழ வேண்டும்? அச்சம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருளை அறிந்து கொண்டால், இதுபற்றி கேள்விகள் நமக்கு வராது. இங்கு அச்சம் என்று பயன்படுத்தப்படுகிற வார்த்தை, வெறும் பயத்தைக் குறிக்கக்கூடிய சொல் அல்ல. மாறாக, இறைவன் மீது வைத்திருக்கிற தனிப்பட்ட மரியாதையையும், மதிப்பையும், இறைவன் மீது வைத்திருக்கிற உண்மையான அன்பையும் குறிப்பதாக இருக்கிறது. இறைவன் மீது நாம் வைத்திருக்கிற இந்த அச்சம் தான், நம்முடைய வாழ்க்கையில் பயன் தருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகம், பல மடங்கு பலன் தரும் விதையாக மாறுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்முடைய வாழ்க்கையை விதைக்கு ஒப்பிடலாம். இந்த உலகத்தில் பிறக்கிற நாம் அனைவரும், விதைகளாக விதைக்கப்படுகிறோம்....

புனித பெரிய யாக்கோபு திருவிழா

மத்தேயு 20:20-28 இன்று பெருமகிழ்வோடு நாம் புனித பெரிய யாக்கோபு நினைவு நாளைக் கொண்டாடுகிறோம். இவர் பெரிய யாக்கோபு என்றும் சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமி ஆகியோரின் மகன். ஏன் இவரை பெரிய யாக்கோபு என்று அழைக்கின்றனர் என்பதற்கு, மற்றவர்களை விட வயதில் மூத்தவராக இருந்தவர். பெரிய உடல்வாகு உடையவர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவுக்கு முன்னதாக இயேசுவினால் அழைக்கப்பட்டவர் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என அதிகமாக ஆசைப்படுகின்றனர். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் செலவழிக்கின்றனர். செலவழித்த பின் அமைதியின்றி, அனந்தமின்றி அலைகின்றனர். இதன் விளைவாக வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என சோகப் பாடல்களை பாடிக் கொண்டு திரின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பெரிய யாக்கோபு விழா நம்மை பெரிய பணக்காரர்களாக மாற அன்புடன் அழைக்கின்றது. எதில் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும்....

ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்

திருப்பாடல் 78: 18 – 19, 23 – 24, 25 – 26, 27 – 28 “இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான்” என்று சொல்வது பழமொழி. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையைக் கேட்டிருப்போம். இன்றைய திருப்பாடலை வாசிக்கிறபோது, இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீரோடு கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது முறையீடு எப்படி அமைந்திருக்கும்? எப்படியாவது இந்த இன்னல்களிலிருந்து கடவுள் தங்களை மீட்க வேண்டும் என்பதாகத்தான் அவர்களது மன்றாட்டு அமைந்திருக்கும். கடவுள் அவர்களை விடுவிக்கிறார். விடுதலை என்பது எளிதானது அல்ல. ஒரே இரவில் பெறக்கூடியது அல்ல. அதற்கு பலவாறு நாம் உழைக்க வேண்டும். இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவிக்கக்கூடிய நிகழ்வு எவ்வளவு சவாலானது என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு செய்த கடவுள் அவர்களை பாலைநிலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வருகிறார். இறைவன் செய்திருக்கிற இவ்வளவு காரியங்களுக்கே இஸ்ரயேல் மக்கள் நன்றி...