Category: Daily Manna

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு

திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10 ”என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு! “நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். மிகப்பெரிய மேடையில், ஒருவர் நன்றி சொல்கிறபோது, அதனை ஒரு கடமையாகத்தான் சொல்வார். அதே நேரத்தில், ஒரு விழாவினை ஏற்பாடு செய்ய எல்லாமுமாக இருந்து, அந்த விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்த மனிதரே, நன்றி சொல்ல வருகிறபோது, அது வெறும் வார்த்தைகளாக இருக்காது. நன்றிப்பெருக்கினால், தன்னுடைய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். அதுதான் உண்மையான நன்றி, ஆழமான நன்றி. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர் தன்னுடைய நெஞ்சத்தை “இறைவனைப் போற்றிடு“ என்று சொல்வது இதனைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகத்தான் இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனுக்கு எழுப்பக்கூடிய நன்றியாக...

கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு

இந்த உவமையை இயேசு மக்களுக்குச் சொன்னபோது, ஏற்கெனவே யூதப்போதகர்கள் சொன்ன இரண்டு கதைகள், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. முதல் கதை: ஓர் அரசர், முக்கியமான அலுவலர்களுக்கு, விரைவில் தான் விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கும்படியும், சொன்னார். விருந்திற்கு எப்படி வர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்திருந்தார். முன்மதியுள்ள அலுவலர்கள், அரசரின் இந்த செய்திக்கு ஏற்ப, தங்களையேத் தயாரித்து, அரசரின் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். ஆனால், முன்மதியற்றவர்கள், விருந்திற்கு இன்னும் நாளாகலாம் என்று, தங்களின் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். திடீரென்று அழைப்பு வந்தபோது, ஞானமுள்ளவர்கள் தகுந்த தயாரிப்போடு, விருந்திற்கான ஆடை உடுத்திச் சென்றனர். முன்மதியற்றவர்களோ, தயாரிப்பில்லாமல் சென்றனர். அவர்கள் விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். ஆக, நாம் எப்போதும், கடவுளின் அழைப்பிற்குத் தயாரிப்போடு இருக்க வேண்டும் என்கிற கருத்தை, இது வலியுறுத்திக்கூறுகிறது. இரண்டாவது கதையும் இதை அடியொற்றித்தான் இருந்தது. ஓர் அரசர் தனது பணியாளர்களுக்கு விலையுயர்ந்த...

வாக்குறுதி மாறாத கடவுள்

கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது. ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை...