Category: Daily Manna

விழிப்பாயிருப்போம்

”நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார். யாரிடமிருந்து ஏமாறக்கூடாது? எப்படி ஏமாற்றுகிறவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது? ஏமாறுகிறவர்களை தீர்ப்பிட முடியாதா? அவர்களின் தவறான செயல்களுக்கு, ஏமாந்து விட்டோம் என்று சொல்லி, தப்பிக்க முடியுமா?இன்றைக்கு தவறு செய்கிறவர்கள், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அல்லது வெகு எளிதாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், தவறு செய்கிறவர்கள் எந்த வழியிலும் தாங்கள் செய்த தவறான செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதோடு, எப்போதும் மற்றவர்கள் தங்களை ஏமாற்றாமல் விழிப்பாயிருந்து, நமது ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் ஏராளமான இளைஞர்கள், தவறான வழிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் தவறான போதனைக்கு பலியாட்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியவர்களின் நயவஞ்சகப்பேச்சுக்கு மயங்கி தங்களது வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள். அதற்கான தண்டனை வருகிறபோது, அவா்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தமடைகிறார்கள். தவறான பேச்சுகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆளாகாமல், நமது ஆன்மாவை காத்துக்கொள்ளக்கூடிய கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும்...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 2 – 3, 36 – 37, 42 – 43 இந்த பாடல் எகிப்தில் இறைவன் செய்த ஆச்சரியங்களை மீண்டும் நினைவுபடுத்துகிற பாடல். எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்கள் பட்ட துன்பங்கள் மக்களின் அழுகுரல் வழியாக கடவுளைச் சென்று அடைந்தது. மக்கள் கடவுளைத் தேடினார்கள். தங்களை அவருடைய சொந்த இனமாக தேர்ந்து கொண்ட கடவுள் எங்கே? என்று தேட ஆரம்பித்தார்கள். அவர்களின் தேடல் கடவுளை, அவருடைய வல்லமையை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் கடவுளின் வல்லமையை உணர ஆரம்பித்தார்கள். கடவுளை நாம் தேடுகிறபோது, நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியடைகிறவிதத்தில் கடவுள் செயல்படுகிறார். மீட்பின் வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, யாரெல்லாம் துன்பங்களில் கடவுளின் துணையை நாடினார்களோ, அவர்கள் அனைவருமே கடவுளின் அளப்பரிய வல்லமையைப் பெற்று மகிழ்ச்சியடைந்தார்கள். பாவங்களைச் செய்தபோது அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளைத் தேடியபோது, அதற்கான பலனையும் மகிழ்ச்சியாக அவர்கள் அனுபவித்தார்கள். நம்முடைய வாழ்விலும்...

வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்தும்

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 மனிதர்களுக்காக கடவுள் தரும் செய்தி என்ன? கடவுள் மனிதர்களை எதற்காகப் படைத்தார்? கடவுள் மனிதர்களை தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னை மாட்சிமைப்படுத்தி கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளோடு இருக்கிற தொடர்பை இழந்துவிட்டான். பாவத்திற்கு ஆளாகிவிடுகிறான். கடவுள் மனிதனை கைவிட்டுவிடவில்லை. அவனை மீட்பதற்காக தன்னுடைய ஒரே மகனையே கையளிக்கிறார். இயேசு இந்த உலகத்தில் மனிதராக பிறந்து, தன்னையே பலியாக்கி விண்ணகம் செல்கிறபோது, ”படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். படைப்பிற்கு நற்செய்தி அறிவிப்பதை அவர் இலக்காக மானிட சமுதாயத்திற்கு தருகிறார். ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடமையாக இருக்கிறது. இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியும் இதுதான். படைப்பு அனைத்துமே கடவுளின் மாட்சிமையை தங்களது பிரசன்னத்தின் மூலமாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ”ஒவ்வொரு பகலும்...

கடவுளே என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு

திருப்பாடல் 119: 89 – 90, 91 & 130, 135 & 175 கடவுளின் வாக்கு என்றென்றும் இந்த உலகத்தில் உள்ளது என்று இந்த திருப்படல் நமக்கு சொல்கிறது. வாக்கு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? வாக்கு என்பதை நாம் வார்த்தை என்கிற பொருளில் அர்த்தப்படுத்தலாம். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, ”ஒளி உண்டாகுக” என்று சொல்கிறார். உடனே அங்கு ஒளி தோன்றிற்று. ஆக, ஆண்டவரது வார்த்தை புதிய உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகமே கடவுளின் வார்த்தையால் உருவானது. இயேசுவின் பிறப்பைப்பற்றி யோவான் சொல்கிறபோது, “வாக்கு மனுவுருவானார்” என்று சொல்கிறார். கடவுளின் வார்த்தை இயேசுவில் மனித உருவம் எடுக்கிறது. ஆக, கடவுளின் வாக்கு என்பது, இறைவனோடு ஒப்பிடப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. ”என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு” என்பது, இறைவன் நம்மில் ஒருவராக, நம்மோடு இயற்கையின் வடிவத்திலும், இறைவார்த்தையின் வடிவத்திலும், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களின் வடிவத்திலும் இருக்கிறார்...

கடவுளே! உலகில் எழுந்தருளும். நீதியை நிலைநாட்டும்

திருப்பாடல் 82: 3 – 4, 6 – 7 உலகில் நடக்கும் அநீதிகளையும், தீங்கு செய்வோரையும் கண்டு மனம் வெதும்பிப்பாடும் ஓர் ஆன்மாவின் குரல் தான் இன்றைய திருப்பாடல். இந்த உலகம் இரண்டு வகையானது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் ஒருபுறம். தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதாரண மக்கள் மீது வரிகளையும், பாரங்களையும் சுமத்தி, அவர்களைச் சிந்திக்க விடாது செய்துகொண்டிருக்கிறவர்கள். மற்றொரு பக்கத்தில், வேறு வழியில்லாமல் அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு பலியாகிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய வர்க்கத்தினர். இந்த இரண்டு வகையினர்க்கும் இடையே மறைமுக போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில், அதிகாரவர்க்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏழை, எளியவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளும் மீள முடியாமல் இந்த அடிமைத்தனத்தை சகித்துக்கொண்டு, தாங்கள் மீண்டு எழுவதற்கு ஏதாவது வாய்ப்பு அமைந்துவிடாதா? என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், திருப்பாடல் ஆசிரியர், கடவுளை...