வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….
இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல,...