Category: Daily Manna

உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7 – 9 உள்ளத்தைக் கடினப்படுத்துவது என்றால் என்ன? செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனையே மீண்டும், மீண்டுமாகச் செய்வது தான் கடினப்படுத்திக்கொள்வது ஆகும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேலின் மீட்பின் வரலாற்றில் எகிப்தை ஆண்ட, பார்வோன் மன்னன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பார்வோன் மன்னன் கடவுள் செய்த வல்ல செயல்களைக் கண்டு, அதனால் அவன் சந்தித்த இழப்புக்களை நினைத்து, இஸ்ரயேல் மக்களை திரும்பிப்போக பணித்தான். ஆனால், நிலைமை சரியான உடனே, அவர்கள் செல்வதற்கு தடைவிதித்தான். அவனுடைய இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். தான் செய்வது தவறு என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும், அதனைச் செய்யாமலிருக்க அவனால் முடியவில்லை. அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரயேல் மக்களும் இதே தவறைச் செய்தார்கள். தங்களை இந்த உலகத்தில் ஒரு நாடாக அடையாளப்படுத்தியவர் கடவுள் என்பது அவர்களுக்குத்தெரியும். இஸ்ரயேல் மக்களின் எழுச்சிக்கும், மாட்சிமைக்கும்...

மூத்தவனா? இளையவனா?

லூக் 15 : 1-3, 11-32 “உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த இரண்டையும் மாற்றி, “நீ வணங்கும் கடவுள் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்கிறது ஊதாரி மகன் நற்செய்தி. ‘மொத்த நற்செய்தி நூல்களின் சாரம்’ என்று இந்த உவமையைக் குறிப்பிடலாம். சில விவிலிய அறிஞர்கள் இப்பகுதியினை, ‘விவிலியத்திற்குள் ஒரு விவிலியம்’ என்கிறார்கள். பிற மதத்தினர் கடவுளை நீதியோடு தண்டிக்கக் கூடியவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை நீதியோடு அன்பு செய்கிறவராகப் பார்க்கிறோம். இங்கு மூத்தமகன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து வாழ்ந்த யூதர்களையும், சொத்துக்களை எல்லாம் இழந்த இளையமகன் பிற இனத்தவர்களையும் பாவிகளையும் குறிக்கின்றனர். இந்த உவமையில் சிறப்பானது இறுதியில்தான் உள்ளது. அது என்னவென்றால் மூத்தமகன் வீட்டிற்குள்ளே சென்றானா? இல்லையா? என்பது தான். இதனை ஆண்டவர் இயேசு...

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21 ஓபேதுஏதோம் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்த கூடாரத்தில் வைத்தனர். அங்கே அனைவரும் இணைந்து ஆடிப்பாடி மகிழ்வதுதான், இந்த திருப்பாடலின் பிண்ணனி (1குறிப்பேடு 16: 1..). இது கடவுளுக்கு செலுத்தும் நன்றிப்பா. அங்கேயிருந்த மக்கள் அனைவரும் கடவுளை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர். கடவுள் அவர்களுக்குச் செய்திருக்கிற நன்மைகளை அறிக்கையிட்டு, எந்நாளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுக்கின்றனர். “நினைவுகூறுதல்” என்பது ஒருவர் செய்த செயல்களை எண்ணிப்பார்ப்பது. நல்லவற்றை திரும்பிப்பார்ப்பதும், கெட்டவற்றை மறப்பதும் இங்கு நமக்கு விடுக்கப்படுகிற அழைப்பு. ஆனால், மனிதர்களாகிய நாம் அதை அப்படியே மாற்றி கடைப்பிடிக்கிறோம். நல்லவற்றை மறந்துவிடுகிறோம். கெட்டவற்றை வாழ்வில் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது நமது வாழ்விற்கு எப்போதுமே ஆபத்து விளைவிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இதே சிந்தனையை நமது ஆன்மீக வாழ்விலும் தொடர்கிறோம். கடவுள் நமக்கு செய்து வந்திருக்கிற பல நன்மையான...

அவனும் மனிதன்

லூக் 16 : 19 – 31 அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவரின் பெயரானது குறிப்பிடப்படவில்லை (காண்க – தி.வெ- 20:15) ஆனால் அடுத்த நேரம் உணவுக்கே வழியில்லாதவனின் பெயரானது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரன் நரகத்திற்கும், ஏழை இலாசர் விண்ணகத்திற்கும் சென்றார்கள். இது அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையிலா? அப்படியென்றால் நம்முடன் வாழும் எந்தப் பணக்காரர்களும் விண்ணகத்திற்கு வரமாட்டார்களா? எல்லா ஏழைகளுக்கும் விண்ணகத்தில் இடமுண்டா? இல்லை. மாறாக, இருவரின் செயல்களையும் மனநிலையையும் பொறுத்தே தீர்ப்பிடப்படுகிறார்கள். பணக்காரன் கண்முன்னேயிருக்கும் இலாசரிடம் மிருகத் தன்மையோடு நடக்கிறான். இலாசரோ தன் அருகேயிருந்த மிருகத்திடம் கூட மனிதத் தன்மையோடு நடந்து கொள்கிறான். ஒரு பணக்காரன் – ஓர் ஏழை, இது உவமையிலே! சில பணக்காரர்கள் – பல ஏழைகள் இது நமது வாழ்க்கையிலே! அறுசுவை உண்டி அமர்க்கள கொண்டாட்டங்கள் இது ஒரு பக்கம். ஒருவேளை உண்ண உணவின்றி, ஒண்ட இடமின்றி, உடுத்தி மூட உடையின்றி ஒருவன்...

வேட்கைத் தணிய…

March 2020 | Bible Quiz – 63 – [ in English ] in Tamil ] ‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம்? ஏன் இந்த 2000 ஆண்டுகளில் இந்த விடயத்தில் மட்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றோம்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவிதமான வெறுமை உண்டு என்பர் சில உளவியலாளர்களும் மெய்யியலாளர்களும். ஆனால் அதனை வெறுமை என்று...