உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்
திருப்பாடல் 89: 1 – 2, 15 – 16, 17 – 18 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகம் என்பது ஒரு மனிதருக்கு முக்கியமானது. ஒருவருடைய முகத்தைப் பார்த்து தான் அவர் அழகானவராக இருக்கிறாரா? என்று முடிவு செய்கிறோம். ஒரு சிலருடைய முகம் இனிமையான முகமாக, பேசுவதற்கு தூண்டக்கூடிய முகமாக இருக்கிறது. ஒரு சிலருடைய முகம் எப்போதும் கோபம் படிந்த முகமாக தெரிகிறது. ஒரு சிலருடைய முகம் கவலை, சோகம் படிந்த முகமாக காட்சியளிக்கிறது. முகம் ஒரு மனிதரைப்பற்றிய பல செய்திகளை, அவருடன் பழகாமலேயே நமக்கு வெளிப்படுத்துகிறது. இன்றைய திருப்பாடலில், கடவுளின் முகத்தின் ஒளியில் கடவுளின் மாட்சிமையை அறிந்த மக்கள் நடப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒளி படர்ந்த முகம் நமக்குச் சொல்லக்கூடிய சிறப்புச் செய்தி ஒன்று இருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவு கவலைகள், துன்பங்கள் இருந்தாலும், அவன் நேர்மையானவனாக இருந்தால், கடவுளுக்கு உண்மையானவனாக இருந்தால், எவ்வளவு சோதனைகள்,...