Category: Daily Manna

கடவுளின் அழைப்பு

அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் பெறுதற்கரிய...

இறைவனின் அளவு கடந்த அன்பு

ஓசேயா 2: 14 – 16, 19 – 20 இஸ்ரயேலுக்கும், கடவுளுக்கும் இருக்கும் உறவை திருமணம் என்கிற பந்தம் மூலமாக, இறைவாக்கினர் இங்கே வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மணமகளுக்கும், இஸ்ரயேலின் கடவுள் அவளுடைய கணவராகவும் ஒப்பிடப்படுகிறார்கள். இஸ்ரயேல் தன்னுடைய கணவரான “யாவே” இறைவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. வேறு கணவர்களோடு வாழ்ந்து வருகிறார். அதாவது விபச்சாரம் செய்கிறார். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்கள், வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதைக் குறிக்கிறது. குறிப்பாக, பாகால் தெய்வத்தை அவர்கள் வணங்கி, அந்த தெய்வத்திற்கு ஆராதனையும், வழிபாடும் செலுத்தி வந்ததை இது வெளிப்படுத்துகிறது. இறைவன் அவளுக்கு வரச்செய்திருந்த துன்பத்தின்பொருட்டு, அவள் வேறு தெய்வங்களை நாடிச்சென்றிருக்கலாம். எனவே, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன் என்கிற நம்பிக்கைச் செய்தியை, இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் இஸ்ரயேல் மக்களின் நலம்விரும்பியாக இருக்கிறார் என்பது இங்கே நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும், அதற்கான...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்

திருப்பாடல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11, 13 – 14 ஒரு குழந்தை, தான் பெற்றோர்களிடத்தில் அன்பு கொண்டிருக்கிறேன் என்பதை எப்படி வெளிக்காட்டும்? அந்த குழந்தைக்கு அடுக்கு மொழி வார்த்தைகள் தெரியாது. எப்படிப் பாராட்டிப் பேச வேண்டும் என்கிற இலக்கணம் தெரியாது. ஆனால், மழலை மொழியில், தாய் அல்லது தந்தையின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டேயிருக்கும். அதுதான் ஒரு குழந்தை தன் பெற்றோரின் மீதோ, தான் அன்பு கொண்டிருக்கிறவர் மீதோ, தன்னுடை உண்மையான பாசத்தை வெளிப்படுத்துகின்ற முறை. இன்றைய திருப்பாடல், அப்படிப்பட்ட குழந்தை உள்ளம் கொண்ட ஆசிரியரின் உள்ளத்து உணர்வுகளை பாடலாக நமக்குத் தருகிறது. இந்த திருப்பாடலில் மீண்டும், மீண்டும் கடவுள் நல்லவர் என்கிற வரிகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வரிகள் கடவுளின் மீது, ஆசிரியர் கொண்டிருக்கிற உண்மையான மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அன்பை முழுமையாக உணர்ந்த ஒருவரால் தான்,...

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

ஆமோஸ் 9: 11 – 15 “அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின்...

பிற இனத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!

திருப்பாடல் 117: 1, 2, மாற்கு 16: 15 கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் சொந்தம் என்கிற மாயையை உடைக்கிறது இந்த திருப்பாடல். இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர். கடவுள் தங்களுக்கு மட்டும் தான் நன்மைகளைச் செய்வார், நமக்கு எதிராக இருக்கிற அனைவருமே கடவுளுக்கு எதிரானவர்கள் என்று நம்பினர். ஆனால், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்கிற புதிய சிந்தனையை, இந்த திருப்பாடல் நமக்கு தருகிறது. கடவுள் அனைவராலும் போற்றுதற்குரியவர். ஏனென்றால், அவர் எல்லாரையும் அன்பு செய்கிறார். எல்லாருக்குமான மீட்புத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். குறிப்பிட்ட மக்களை மட்டும் மீட்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியதில்லை. அவருடைய பார்வையில் எல்லாருமே சமமானவர்கள் தான். எல்லாருமே அவருடைய பிள்ளைகள் தான். அவர் எல்லாருக்கும் நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறவர். அந்த இறைவனை நாம் குறிப்பிட்ட மக்களுக்கானவர் என்று தவறாக புரிந்து கொண்டால், அவருடைய அன்பை உணர...