இறைவாக்கினர்களின் பணி
ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...