Category: Daily Manna

ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூறுகின்றேன்

கடவுளிடம் திருப்பாடல் ஆசிரியர் சிறப்பான விதத்தில் அன்பு கூர்வதாக சொல்கிறார். கடவுளிடம் அன்பு கொள்வதன் காரணம் என்ன? ஒரு மனிதரிடத்தில் அன்பு கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த மனிதரிடத்தில் இருக்கிற ஏதாவது ஒரு பண்பு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதரின் அழகு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதர் நம்மீது காட்டுகிற தனிப்பட்ட அன்பு நம்மை கவர்ந்திருக்கலாம். திருப்பாடல் ஆசிரியரின் அன்புக்கு காரணம் என்ன? ஆண்டவர் தன் மீது காட்டக்கூடிய அன்பை பலவிதமான உருவகங்களால் அவர் உணர்த்துகிறார். கடவுளை மலையாக, கோட்டையாக, மீட்பராக, கேடயமாக பார்க்கிறார். இவை அனைத்துமே பாதுகாப்பிற்கு பெயர் போனவை. மலை பாதுகாப்பானதாக இருக்கிறது. கேடயம் நம்மைப் பாதுகாக்கிறது. கோட்டை எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறது. கற்பாறை உறுதியானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆக, கடவுள் அவரை பாதுகாக்கிறவராக இருப்பதால், கடவுளை அன்பு செய்வதாக சொல்கிறார். கடவுள் அவரைப் பாதுகாக்கிறார் என்றால், கடவுள் அவரை அன்பு செய்கிறார் என்பது அர்த்தம். அந்த...

வெட்டப்படுவாயா? தட்டப்படுவாயா?

லூக்கா 13:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளியே காட்ட வேண்டும். அப்படி வெளிக்கொணரும் நபர்களைத் தான் இந்த உலகம் தட்டிக்கொடுத்து பாராட்டுகிறது. இல்லையென்றால் இந்த உலகம் வெட்டுகிறது. இவர்களால் இந்த உலகில் வாழவே முடியாது. எல்லாரும் நன்கு வளர வேண்டும், கடவுள் கொடுத்த திறமைகளை வைத்து திறம்பட செயல்பட வேண்டும் என செல்லமாய் அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். மற்றவர்களால் நாம் பாராட்டப்பட வேண்டும் அல்லது தட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு செயல்களை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். 1. பலன் கொடுக்கனும் இதுவரை நாம் யாரெல்லாம் நன்கு பலன் கொடுத்து கொண்டிருக்கிறார்களே அவர்களை கூர்ந்து...

தூய ஆவியின் வழிநடத்துதல்

ஒரு குடும்பத்தில் பலர் இணைந்து வாழ்வது என்பது எளிதானது அல்ல. அது சவாலானது. நம்முடைய எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே வெவ்வேறானது. எனவே, கூடி வாழ்கிற வாழ்க்கை முறை மிக மிக கடினமானது. ஆனால், கிறிஸ்தவ அழைப்பு என்பது, அப்படிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து விட்டு, ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிற வாழ்க்கை முறையேயாகும். அப்படி வாழ்கிறபோது, நாம் என்னென்ன பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பவுலடியார் கூறுகிறார். நம்மிடத்தில் மனத்தாழ்ச்சி இருக்க வேண்டும். அகம்பாவம், கர்வம், செருக்கு இல்லாத தாழ்ச்சியே இதனுடைய பொருளாகும். எவ்வளவு பிணக்குகளும், வெறுப்பும் வந்தபோதிலும், கனிவோடும், பொறுமையோடும், ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியில் நாம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். இப்படி நாம் ஒன்றாக வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை. நாம் பெற்றிருக்கிற நம்பிக்கை ஒரே நம்பிக்கை. நாம் பெற்றிருக்கிற திருமுழுக்கு ஒரே மாதிரியானது. எனவே, நம் அனைவருக்கும் தந்தையும்...

எதையும் குறைக்காதே! மிகுதியாக்கு…

லூக்கா 12:39-48 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்களாகிய நமக்கு கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கும்போது கணக்குப் பார்க்கவில்லை. அள்ளி அள்ளி மிகுதியாக தந்தார். அவரிடமிருந்து அறிவு, ஆற்றல், திறமை, பணம், செல்வம் அனைத்தையும் மிகுதியாகப் பெற்ற நாம் பிறருக்கு வழங்கும்போது குறைப்பது ஏன்? மிகுதியாக்குங்கள் என்ற மிக முக்கியமான அறிவிப்போடு இன்று வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் நம்மை மிகுதியாக்க வேண்டும். நாம் கஞ்சத்தனமாக செயல்படாமல் கொடுப்பதில், நம்மை செலவழிப்பதில் செல்வந்தர்களாக செயல்பட வேண்டும். அதற்காக இரண்டு சிந்தனைகளை நம் மனதில் நிறுத்துவது சாலச் சிறந்தது. 1. எதுவும் வராது நாம் பிறரோடு நம்முடன் இருப்பவைகளை பகிராமல் இருக்கும் போது ஒரு கருத்தை மிகவும் ஆழமாக...

வருமுன் காத்துவிட்டீர்களா? தூங்கிவிட்டீர்களா?

லூக்கா 12:35-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வருமுன் காப்பது சிறந்தது என்பார்கள். வாழ்க்கை என்னும் தேர்வுக்காக தங்களை தினமும் விழிப்போடு தயார் செய்பவர்கள் ஒருசிலரே. அவர்களால் மட்டுமே வாழ்க்கையை மிக அழகாக கொண்டு போக முடியும். ஆனால் பலர் இந்த தேர்வில் தோல்வியையே சந்திக்கிறார்கள். இப்படி தோல்வியைச் சந்தித்து துவண்டு போயிருக்கிறவர்களை தூக்கி விடவே இன்றைய நாள் நற்செய்தி வாசகம் வருகிறது. இரண்டு செயல்களை செய்ய சொல்கிறது. 1. வெறி நான் விழிப்பாக இருந்து என்னுடைய பங்களிப்பை என்னைச் சூழ்ந்து இருக்கின்றவர்களுக்கு கொடுப்பேன் என்ற வெறி கண்டிப்பாக நமக்கு வேண்டும். இந்த வெறி நமக்குள்ளே ரிங்டோனாக இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிக்க வேண்டும். அந்த ஒலி...