Tagged: verse of the day in tamil

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13

உரோமையர் 1:18

இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது: ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். ~ உரோமையர் 1:18

எசாயா 40:29

அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். எசாயா 40:29

2 சாமுவேல் 7:28

தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே
~2 சாமுவேல் 7:28
Jesus MyGreatMaster

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:12

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:12