Tagged: verse of the day in tamil

விடுதலைப் பயணம் 4:15

உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய். ~விடுதலைப் பயணம் 4:15

யோவான்14:18

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். ~யோவான்14:18

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:23

நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. ~ எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:23

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

‘ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய். ~ நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3