Tagged: Daily manna

பகை முற்றுகிறது

(யோவான் 07: 1-2, 10, 25 – 30) யோவான் ஐந்தாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தியதால், எழும்பிய எதிர்ப்பு அப்படியே தொடர்ந்து, ஆறாம் பிரிவில் இயேசு, “நான் உயிர் தரும் உணவு” என்று கூறியதைக் கேட்டதும் இன்னும் வலுக்கிறது. இன்றைய ஏழாம் பிரிவோ எதிர்ப்பிலேயே தொடங்குகிறது. இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாக வலுக்கிறது. ஓய்வு நாளில் குணம் கொடுத்ததற்கே அவரை எதிர்த்த யூதர்களுக்கு இப்போது அவரின் மீது பழிபோட இன்னும் அதிகக் காரணங்கள் கிடைக்கின்றன. 1. யூதக் கணிப்புப்படி (மாற்கு 14 : 61-63) தன்னை மெசியா, தன்னைக் கடவுளிடமிருந்து வந்தவன் என்று சொல்லும் எவனும் கடவுளைப் பழித்துரைக்கிறான் என நம்பினர். 2. இதையும் கூறிவிட்டு இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களைப் பார்;த்து, “நீங்கள் கடவுளை அறியவில்லை, நானோ அவரை அறிவேன்” (யோவான் : 28,29) என்கிறார். வெந்த புண்ணில்...

பதில் தொடர்கின்றது

(யோவான் 5:31-47) பரிசேயர்களுக்கான பதில் இன்றைய நற்செய்தியிலும் தொடர்கின்றது. இயேசுவே இறைமகன் என்பதற்கான சான்றுகளைத் தனக்குத்தானே எடுத்துக்காட்டுவதோடு, மற்றவர்கள் அவருக்கு சான்று பகர்ந்தது பற்றியும் எடுத்துரைக்கின்றார். இதில் தந்தைக் கடவுளின் சான்றும், திருமுழுக்கு யோவானின் சான்றும் மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இச்சான்றுகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருந்தன. அதனால் யூதர்களுக்குக் குறிப்பாகப் பரிசேயர்களுக்கு இயேசுவே இறைமகன் என்று கூறுவது மிகவும் கடினமாக இருந்தது. அச்சான்றுகளை அறியாதவர்கள் பலர். அறிந்தவர்களிலும் உணர்ந்தவர்கள் சிலர். இப்படியிருக்க எப்படி இயேசுவின் சான்றினை ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் இயேசு தான் இறைமகன் என்பதனை தன் வார்த்தைகளால் மட்டும் காட்டவில்லை. மாறாகத் தன் செயல்களினாலும் காட்டினார். அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லை. மற்றவர்களைப் போல அவர் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. மாறாகத் தான் சொன்னது அனைத்தையும் செய்துவிட்டுச் சென்றார். காண்க : “பார்வையற்றோர் பார்க்கின்றனர், ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், காது கேளாதோர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர்,...

திட்டமிட்டு இழக்காதே!

(யோவான் 05 : 17-30) ஓய்வு நாளன்று இயேசு குணமளித்ததனால்   பரிசேயர்கள் அவர் மீது கோபம் கொண்டு பொங்கி எழுகின்றனர். இன்றைய நற்செய்தி, அப்பரிசேயர்க்குப் பதிலாகவும், இன்னும் தெளிவில்லாமல் நிலைவாழ்வினைப் பற்றி கேள்வி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நல்லதொரு புரிதலாகவும் அமைகிறது. புடிக்கும் காலத்திலே எல்லோர்க்கும் கணிதப் பாடம் எளிதாக வராது அல்லவா? அப்பொழுது எம் கணித ஆசிரியர் கூறுவார், நான் கணிதப்பாடத்தை எளிதாக்கி உங்கள் கைகளில் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே தேர்ச்சி பெறக் கூடாது என்று நினைத்தால் கூட உங்களால் ஆகமுடியாது. ஆனால் தேர்ச்சி பெறக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்பட்டால் மட்டுமே, உங்களால் தேர்ச்சி பெறாமலிருக்க முடியும் என்பார். இதைப் போன்று தான் நம் இயேசு “நிலைவாழ்வு” என்ற சூத்திரத்தை மிக எளிதாக்கி, நம் கண்முன், நம் கைகளில் வைத்துவிட்டார். “என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புவோர் நிலைவாழ்வினைப் பெற்றுக் கொள்வர்”. அவரது வாழ்நாள்...

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8 இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது. கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக,...

தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்

யோவான் 4: 43-54 இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது. அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது. மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம்,...