Tagged: Daily manna

மனமாற்றம்

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....

புகழ்ச்சியும் தற்பெருமையும்

நம்மைப்பற்றி நாமே புகழ்வது தற்பெருமை. அடுத்தவர் நம்மைப்பார்த்து வியந்து பேசுவதுதான் புகழ்ச்சி. இந்த தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரியாமல், வாழ்வையே இழந்தவர்கள் தான் பரிசேயர்கள். பரிசேயர்கள் தாங்கள் செய்வது சரி என்று நினைத்தார்கள். அது தவறு இல்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், தாங்கள் செய்வது மட்டும் தான் சரியென்று நினைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இதனைத்தான் இயேசு நேரடியாகக் கண்டிக்கிறார். இயேசு எப்போதுமே தன்னைப்பற்றி உயர்வாகப் பேசியதில்லை. ஆனால், மக்கள் அவரை உயர்வாகப் பேசினார்கள். பரிசேயர்கள் எப்போதுமே தங்களை உயர்வாகவே எண்ணினார்கள். ஆனால், மக்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இது அவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனாலும், தங்களது அதிகாரத்தினால், மக்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் நினைத்ததைச் சாதித்தனர். இப்படிப்பட்ட தற்புகழ்ச்சியை இயேசு கடுமையாக எதிர்க்கிறார். இன்றைக்கு புகழ்ச்சி என்பது நமது வாழ்வைப்பார்த்து, மக்கள் நமக்குக் கொடுக்கக்கூடிய அடையாளம். அதனை நாமே கேட்டுப்பெற முடியாது. நாம் வாழக்கூடிய வாழ்வைப்பார்த்து, அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும்....

அடிமைத்தனமே விடுதலை

லூக் 1: 26 -38 பல அடிமைத்தனத்தை இந்த பூவுலகு கண்டுள்ளது. பல புரட்சிகளை இம்மானிடர்கள் கடந்து வந்துள்ளனர். எத்தனைப் புரட்சிகளும் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனிதகுலம் எதற்காகவாது அல்லது யாருக்காவது இன்றுவரை அடிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மறக்க, மறைக்க இயலாது. அப்படியென்றால் அடிமைத்தனம் இவ்வுலகில் நிரந்தரமா? நம்மை நாம் விடுவிக்க இயலாதா? இத்தகைய கேள்விகளுக்கு விடையும், மாதிரியும் தான் இந்த பெருவிழா. சாலையோரத்தில் நாயினைச் சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து கேட்டால் அவர் நான் தான் என் நாயினை இழுத்துச் செல்கிறேன் என்றும், இந்த நாயினைத்தான் கழுத்தில் கட்டி என் கைக்குள் வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். ஆனால், பல நேரங்களில் அவரைத்தான் அந்த நாய் தான் விருப்பட்ட இடத்திற்கெல்லாம் இழுத்து செல்கிறது. இதனைப் போலதான் நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற ஆசைகள், கனவுகள், திட்டங்கள், எல்லாம் நம் வாழ்வை அதனதன் வழிகள் இழுத்துச்...

இரட்டை நிலைப்பாட்டைக் களைய

லூக் 11 : 14-23 இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது. சில இரட்டை நிலைகள் : • நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே மற்றவர்கள் சாதித்தால் ஏதோ...

முழுமையை நோக்கி…

மத் 5: 17-19 திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே....