Tagged: Daily manna

நல்ல முயற்சி

”விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு” என்று பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில் பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார். பேதுருவுக்கு கடல் அன்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். ஒருநாள் மீன்பாடு இருக்கும், மற்றொரு நாள் வெறுமனே திரும்பி தான் வரவேண்டியிருக்கும் என்பது பேதுரு அறியாத ஒன்றல்ல. இதுதான் அவரது வாழ்க்கை. எனவே, மீன்பாடு இல்லையென்றாலும், பேதுருவுக்கு பெரிய வருத்தம் ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல், கடலுக்குச் சென்று திரும்பியவுடன் தனது வலைகளை, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் இயேசு மீண்டும் வலைகளைப் போடச்சொன்னவுடன், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மீண்டும் ஒரு முயற்சி எடுப்போமே, என்று வலைகளைப் போடுகிறார். நிச்சயமாக, பேதுருவுக்குள்ளாக, அவருடைய உள்ளுணர்வு...

பெற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்

பெற்றுக்கொண்டு கொடுப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்கிற விழுமியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிற அருமையான பகுதி. நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வங்கள் அனைத்துமே பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு பயன்படுவதற்கும் தான் என்பதை நாம் உணர, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு தனது சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார். அவர்களுக்கு தேவையான வல்லமையைக் கொடுக்கிறார். நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு, தீய ஆவிகளை ஓட்டுவதற்கு, நற்செய்தியை துணிவோடு அறிவிப்பதற்கு, அவர்களை தயாரித்து அனுப்புகிறார். சீடர்கள் இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்டது, தாங்களே வைத்திருப்பதற்காக அல்ல, அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான். அந்த வகையில், இயேசுவின் சீடர்கள் அதனை நிறைவாகச் செய்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். காரணம், பெற்றுக்கொண்டு, கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு கொடுப்பதுதான். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள், அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கிறார்கள். நான் தேர்தலில் இவ்வளவுக்கு முதலீடு செய்கிறேன். நான் எவ்வளவுக்கு வாரிச்சுருட்ட முடியுமோ, அவ்வளவுக்கு சுருட்ட வேண்டும்....

ஆண்டவரே என் ஒளி

திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9 ”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு...

வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….

இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல,...

ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே!

திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18 ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல்...