Tagged: Daily manna

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9 ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை. நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது....

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்â€?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக...

திருச்சிலுவையின் மகிமை விழா

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள்,...

மற்றவர்களை மதித்து நடப்போம்

”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார். இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம். நாம்...

பகைவரை அன்பு செய்வோம்

பகைவர்களை அன்பு செய்வது என்கிற சிந்தனையின் பொருள் பற்றி பல்வேறு விவாதங்கள், சந்தேகங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுவது இயல்பு. அன்பு என்பதற்கு கிரேக்க மொழியில் பல அர்த்தங்கள் தரப்படுகிறது. பகைவருக்கு அன்பு என்பதன் பொருள், உள்ளத்திலிருந்து சுரக்கின்ற இரக்கம், நன்மைத்தனம். அதாவது, அடுத்தவர் எனக்கு என்ன தீங்கு இழைத்தாலும் பரவாயில்லை, நான் அவர்களின் நலம் மட்டுமே நாடுவேன் என்கிற உணர்வுதான் பகைவருக்கு காட்டுகின்ற அன்பு. நமது பெற்றோரை அன்பு செய்வது போலவோ, நமது உடன்பிறந்தவர்களை அன்பு செய்வது போலவோ, நமது உறவினர்களை அன்பு செய்வதுபோலவோ நாம் நமது பகைவரை அன்பு செய்ய முடியாது. இதுதான் உண்மை. நமது பெற்றோரை அன்பு செய்வதைப்போல நான் எனது பகைவரை அன்பு செய்யவே முடியாது. இது இயல்பானது. ஆனால், நமது பகைவரின் நலனை நாம் எப்போதும் நாட முடியும். நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தலாம், நமக்கு தீங்கு செய்யலாம், நமது பெயரைக்கெடுக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அவர்களின் நலன்...