Tagged: Daily manna

இயேசுவின் தலைமைப்பண்பு

இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் தன்னைப்பற்றி மக்கள் யார்? என்று சொல்வதாகக் கேட்கிறார். சீடர்கள் அனைவருமே அவர்கள் மக்களிடமிருந்து கேட்ட பதில்களை, இயேசுவிடத்தில் சொல்கிறார். இங்கே சீடர்களின் திறந்த மனநிலையைப் பார்க்கிறோம். தெளிந்த மனநிலையைப்பார்க்கிறோம். திறந்த மனநிலை என்பது, வெளிப்படையாகப் பேசுவதைக் குறிக்கிறது. சீடர்கள், இப்படிச்சொன்னால் இயேசு என்ன நினைப்பார்? என்று நினைக்கவில்லை. மாறாக, தாங்கள் கேட்டதை அவர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். தெளிந்த மனநிலை என்பது, துணிவோடு சொல்கிறார்கள். குற்ற உணர்வு இருக்கிறபோது, இறுகிய உள்ளத்தோடு இருக்கிறபோது, நமக்கு நாவில் வார்த்தைகள் வராது. ஆனால், உள்ளம் தெளிந்த சிந்தனையோடு இருக்கிறபோது, நம்மால் சிறப்பாக, நாம் நினைத்ததைப் பேச முடியும். இதில் இயேசுவின் பங்கும் இருக்கிறது. இயேசு இப்படியான சூழ்நிலையை தன்னுடைய சீடர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒரு அடக்குமுறையான சூழலாக இல்லாமல், அனைவருடைய கருத்துக்களுக்கும் இடங்கொடுக்கக்கூடிய, ஒரு ஆரோக்யமான சூழல் அங்கே நிலவுவதற்கு காரணம், இயேசு தான். இன்றைக்கு நாம் ஒரு குழுவின் தலைவராகவோ,...

இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான் !

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பல தரப்பட்ட மக்களும் இயேசுவைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் வெவ்வேறாக இருந்தது. எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அவருடைய ஆறுதல் மொழிகளைக் கேட்க விரும்பினர். நற்செய்தியில் மகிழ விரும்பினர். நோயாளர்கள் அவரிடமிருந்து நலம் பெற விரும்பினர். நல் மனம் படைத்தோர் அவரின் அருள்மொழி கேட்டு அவரைப் பின்பற்ற விரும்பினர். ஆனால், குறுநில மன்னன் ஏரோது இத்தகைய நோக்கத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. அவன் மனம் குழம்பினான் என்று நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டிய கொடூரன் அவன்! இயேசுவை ஒருசிலர் திருமுழுக்கு யோவானுடன் ஒப்பிட்டுப் பேசியதால், இயேசு யார், என்ன பணி செய்கிறார் என்ற குழப்பத்துக்கான விடை காணவே இயேசுவைக் காண விரும்பினானே அன்றி, அவரிடமிருந்து விடுதலையோ, நலவாழ்வோ, நிறைவாழ்வோ பெற விரும்பி அல்ல. எனவே, அவனுடைய தேடல், ஆர்வம் இறைவனுக்கு ஏற்புடைய தேடல் அல்ல. நாம் இறைவனை என்ன மனநிலையில் தேடுகிறோம் என்று கொஞ்சம்...

என்றும் வாழும் கடவுள் போற்றி

தோபித்து 13: 2, 3, 6, 7, 8 தோபித்து கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்த ஒரு மனிதர். குறிப்பாக, உடல் ஒவ்வொன்றும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டது. உடலுக்குரிய மதிப்பை வழங்க வேண்டுமென்று, இறந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அவர் செய்யக்கூடிய காரியங்களால் அவருக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும் கூட, அதனைப் பற்றி கவலைப்படாமல் கடவுளைவிடாது பற்றிக்கொண்டவர். அவருடைய வாழ்வில் தான் செய்கிற ஒவ்வொரு செயலும் கடவுளைப் போற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்தார். கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற்றிருக்கிற வரிகளில் வெளிப்படுகிறது. தோபித்தை பொறுத்தவரையில் கடவுள் இரக்கமும், நீதியும் உள்ளவர் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கடவுள் ஒரு மனிதன் செய்கிற செயல்களுக்கு ஏற்ப, நீதி வழங்குகிறவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். கடவுள் எப்போதும்...

மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 3 – 4ஆ, 4இ – 5 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் பயன்பாட்டிற்காக தாவீது அரசரால் எழுதப்பட்ட பாடல். எருசலேம் மக்கள் திருவிழாக்களைக் கொண்டாடுவதில் இன்பம் கண்டனர். கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கடவுளின் திருப்பெயரைப் போற்றுவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தாவீது அரசரின் காலத்தில் தான், எருசலேம் நகர் முக்கியத்துவம் பெற்றது. மக்கள் திருவிழாக்களைச் சிறப்பிப்பதற்கு எருசலேம் நகர் வருவது வழக்கம். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேமின் சிறப்பை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. எருசலேம் என்பது ஆண்டவர் வசிக்கக்கூடிய இல்லம் மட்டுமல்ல. மாறாக, விண்ணகத்தின் பிரதிபலிப்பாக எருசலேம் நகர் மக்களால் பார்க்கப்பட்டது. எருசலேம் நகரத்திற்குச் செல்வது விண்ணகத்திற்கு செல்வது போன்றதொரு மனநிலையை உருவாக்கியது. எருசலேம் செல்வதை மக்கள் கடவுளின் புனித நகரத்திற்கு அதாவது விண்ணக நகரத்திற்குச் செல்வதாக உணர்ந்தனர். அந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதற்கு நாம் மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று...

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்

திருப்பாடல் 126: 1 – 2b, 2c – 3, 4 – 5, 6 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் பல அற்புதச் செயல்களைச் செய்திருந்தாலும், “மாபெரும்” செயல் என்று ஆசிரியர் கூறுவது என்ன? முதலாவது இறைவார்த்தை சொல்கிறது: ஆண்டவர் சீயோனின் அடிமைநிலையை மாற்றினார். சீயோன் என்பது எருசலேம் நகரைக் குறிக்கிற வார்த்தை. எருசலேம் பகை நாட்டினரால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இனிமேல் மீண்டு வராது, அதனுடைய மகிமை முடிந்து விட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஆண்டவர் அற்புதமாக தன்னுடைய வல்ல செயல்களினால் எருசலேமை மீட்டார். மீண்டும் புதுபொலிவு பெறச் செய்தார். எருசலேம் நகரம் மீது இறைவன் கொண்டிருக்கிற அன்பிற்கான காரணம் என்ன? ஏனென்றால், இறைவன் எருசலேமில் குடிகொண்டிருக்கிறார். அது தான் மண்ணகத்தில் ஆண்டவர் வாழும் இடம். தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வழங்குகிற இடம். அந்த இடத்தை...