தொழுநோயாளியின் நம்பிக்கை
இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளி, இயேசுவிடத்தில் நம்பிக்கையோடு வருவதைப் பார்க்கிறோம். இயேசு தன்னை நிச்சயம் குணப்படுத்துவார், இயேசுவிடத்தில் சென்றால், தனது துன்பத்திற்கு விடுதலை கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடத்தில் அவர் வருகிறார். பொதுவாக, தொழுநோயாளிகள் யூதப்போதர்களின் அருகில் வரமாட்டார்கள். அது தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வருவது தெரிந்தால், மற்றவர்கள் அவர்களை கல்லால் எறிந்து விரட்டலாம். இயேசுவைப்பற்றியும், அவரது போதனை பற்றியும், ஏழைகளிடத்தில் அவர் காட்டிய இரக்ககுணம் பற்றியும், நிச்சயம் அந்த தொழுநோயாளி கேள்விப்பட்டிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையோடு தான் அவர் இயேசுவிடத்தில் வருகிறார். ஒருவேளை யாராவது கல்லெறிந்தால், அதைத்தாங்குவதற்கும் அவர் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும். இயேசு நிச்சயம் தன்னை வரவேற்பார், என்று அந்த தொழுநோயாளி உறுதியாக நம்பினார். தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக யூதப்பாரம்பரியத்தில் கருதப்பட்டது. ஆனால், இந்த மனிதன் இயேசுவை முழுமையாக நம்பினான். இயேசுவிடத்தில் இருக்கிற வல்லமை, நிச்சயம் தன்னை விடுதலையாக்கும் என்று அவன்...