Tagged: Daily manna

இறைவனின் அளவு கடந்த அன்பு

ஓசேயா 2: 14 – 16, 19 – 20 இஸ்ரயேலுக்கும், கடவுளுக்கும் இருக்கும் உறவை திருமணம் என்கிற பந்தம் மூலமாக, இறைவாக்கினர் இங்கே வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மணமகளுக்கும், இஸ்ரயேலின் கடவுள் அவளுடைய கணவராகவும் ஒப்பிடப்படுகிறார்கள். இஸ்ரயேல் தன்னுடைய கணவரான “யாவே” இறைவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. வேறு கணவர்களோடு வாழ்ந்து வருகிறார். அதாவது விபச்சாரம் செய்கிறார். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்கள், வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதைக் குறிக்கிறது. குறிப்பாக, பாகால் தெய்வத்தை அவர்கள் வணங்கி, அந்த தெய்வத்திற்கு ஆராதனையும், வழிபாடும் செலுத்தி வந்ததை இது வெளிப்படுத்துகிறது. இறைவன் அவளுக்கு வரச்செய்திருந்த துன்பத்தின்பொருட்டு, அவள் வேறு தெய்வங்களை நாடிச்சென்றிருக்கலாம். எனவே, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன் என்கிற நம்பிக்கைச் செய்தியை, இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் இஸ்ரயேல் மக்களின் நலம்விரும்பியாக இருக்கிறார் என்பது இங்கே நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும், அதற்கான...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்

திருப்பாடல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11, 13 – 14 ஒரு குழந்தை, தான் பெற்றோர்களிடத்தில் அன்பு கொண்டிருக்கிறேன் என்பதை எப்படி வெளிக்காட்டும்? அந்த குழந்தைக்கு அடுக்கு மொழி வார்த்தைகள் தெரியாது. எப்படிப் பாராட்டிப் பேச வேண்டும் என்கிற இலக்கணம் தெரியாது. ஆனால், மழலை மொழியில், தாய் அல்லது தந்தையின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டேயிருக்கும். அதுதான் ஒரு குழந்தை தன் பெற்றோரின் மீதோ, தான் அன்பு கொண்டிருக்கிறவர் மீதோ, தன்னுடை உண்மையான பாசத்தை வெளிப்படுத்துகின்ற முறை. இன்றைய திருப்பாடல், அப்படிப்பட்ட குழந்தை உள்ளம் கொண்ட ஆசிரியரின் உள்ளத்து உணர்வுகளை பாடலாக நமக்குத் தருகிறது. இந்த திருப்பாடலில் மீண்டும், மீண்டும் கடவுள் நல்லவர் என்கிற வரிகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வரிகள் கடவுளின் மீது, ஆசிரியர் கொண்டிருக்கிற உண்மையான மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அன்பை முழுமையாக உணர்ந்த ஒருவரால் தான்,...

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

ஆமோஸ் 9: 11 – 15 “அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின்...

இறைவாக்கினர்களின் பணி

ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...

உண்மையான அர்ப்பண வாழ்வு

யோவானுடைய இறப்புச்செய்தியைக் கேட்டவுடன் இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றதாக நற்செய்தியாளர் கூறுகிறார். அவர் தனிமையாக சென்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். “தன்னுடைய உறவினர்“, “தனது முன்னோடி” திருமுழுக்கு யோவானுடைய அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கலாம். எனவே, சற்று ஆறுதல் பெறுவதற்காக இந்த தனிமையை விரும்பியிருக்கலாம். அல்லது ஓய்வில்லாத பணிவாழ்வில் சிறிது இளைப்பாற விரும்பியிருக்கலாம். அல்லது பாடுகள் நெருங்குகின்ற வேளையில் தன் இறைத்தந்தையோடு ஒன்றித்திருக்க ஆசைப்பட்டிருக்கலாம். எது எப்படியென்றாலும், அவர் அந்த இடத்திற்கு தனிமையாக இருப்பதற்கு செல்வதற்கு முன்பே, மக்கள் அவர் அங்கே செல்வதைக்கேள்விப்பட்டு சென்றுவிட்டனர். இயேசு அவர்களைப்பார்த்து கோபப்படவில்லை. எரிச்சலடையவில்லை. எனக்கு ஓய்வுக்கு கூட நேரம் கொடுக்க மாட்டார்களா? என்று ஆதங்கப்படவில்லை. மாறாக, மக்கள் மீது பரிவு கொள்கிறார். பணிவாழ்வு என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு அல்ல. எல்லா நேரமும் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய வாழ்வு. அதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். நமக்கான...