Tagged: Daily manna

உண்மையான அர்ப்பண வாழ்க்கை

எசாயா 6: 1 – 8 இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு இன்றைய வாசகமாக நமக்குத் தரப்படுகிறது. இறைவாக்கினர் எசாயா, விண்ணகத்தில் கடவுளின் அரியணையில் நடக்கும், விவாதத்தைக் காட்சியாகக் காண்கிறார். இங்கு கடவுள் நேரடியாக இறைவாக்கினர் எசாயாவை அழைக்கவில்லை. ஆண்டவர் தன்னுடைய விண்ணகத் தூதர்களோடு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட எசாயா, “இதோ நானிருக்கிறேன்” என வினவுகிறார். எசாயாவின் இந்த ஏற்பு, மற்ற இறைவாக்கினர்களின் அழைப்போடு பொருத்திப் பார்க்கையில் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணமாக, மோசே இறைவனால் அழைக்கப்படுகிறார். ஆனால், அந்த அழைப்பை முதலாவதாக மறுக்கிறார். இறைவாக்கினர் எசேக்கியலின் அழைப்பும் இதேபோல, எசேக்கியலால் முதலில் மறுக்கப்படுகிறது. ஆனால், எசாயா இறைவாக்கினர் உடனடியாக இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார். மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மாறாக, இறைவாக்கினர் எசாயாவின் ஏற்பு, அவர் தன்னை இறைவனுடைய பணிக்காக முழுமையாக கையளித்ததை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. இதுதான் கடவுளுக்கு விருப்பம் என்றால், அதற்கு குறுக்கே நிற்பதற்கு...

வார்த்தைகளின் வழியில் இறைவனோடு பேசுவோம்

ஓசேயா 14: 1 – 9 “மொழிகளை ஏந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்”என்று, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதாவது, கடவுளிடத்தில் வருகிறபோது, நம்முடைய வார்த்தைகளை ஏந்தி வந்து சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள். கடவுளிடத்தில் வருகிறபோது, நாம் வார்த்தைகளை ஏந்தி வருவது அவசியமானது. நம்முடைய உணர்வுகளோடு கடவுளிடத்தில் பேசுவது தவறல்ல. நாம் இறைவன் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். உள்ளத்தளவில் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். இந்த உணர்வுகளோடு பேசுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் கடந்து நாம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும். உணர்வுகளைக் கடந்து நாம் கடவுளிடத்தில் எப்படி செல்வது? வார்த்தைகள் வழியாக நாம் கடவுளிடத்தில் செல்ல வேண்டும்? கடவுள் நம்முடைய உள்ளத்து உணர்வுகளை, நாம் அறிவார்ந்து சிந்திக்கிற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அருமையான வார்த்தைகளைத் தந்திருக்கிறார். கடவுள் முன்னால் அமர்ந்து, அவருடைய அன்பை நாம் அனுபவிக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நான் கடவுளை அன்பு செய்வது...

இறைவனின் தாயுள்ளம்

ஓசேயா 11: 1 – 4, 8 – 9 இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் “திருமணம்” என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது....

மக்களுக்கான இறைப்பணி

கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள், கொடையாகவே வழங்குங்கள் என்று நம் ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் மொழிகிறார். இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகிறார்? என்ன நோக்கத்திற்காக அனுப்புகிறார்? மக்களுக்கு கடவுளின் ஆசீரும், அருளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுப்புகிறார். இங்கே, இரண்டு செய்திகளை நாம் பெற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசவில்லை. தங்களைப்பற்றி உயர்வாக எண்ணவில்லை. மற்றவர்களின் வாழ்வைக் கெடுத்து, குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பிரசன்னம் மற்றவர்களுக்கு கடவுளின் இருப்பை உணர்த்துவதாக இருக்கிறது. அவர்கள் கடவுளின் அன்பை, தங்களின் செயல்கள் வழியாக உரக்கச்சொல்கிறவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவதாக, சீடர்கள் கடவுளின் அருளை மக்களுக்கு, குறிப்பாக தேவையில் இருக்கிறவர்களுக்கு பெற்றுத்தரும் வாய்க்காலாக இருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றுத்தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். கடவுளின் மன்னிப்பையும், இரக்கத்தையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துச்செல்லும், இறைப்பணியை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம் அனைவருமே மற்றவர்களுக்கு...

கடவுளின் அழைப்பு

அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் பெறுதற்கரிய...