Tagged: தேவ செய்தி

பொதுநலப்பணி

பிறருக்கு உரியவற்றில் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகுந்தவராய் இருக்க வேண்டும் என்று இயேசு அழைப்புவிடுக்கிறார். பிறருக்கு உரியது எது? இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கக்கூடிய பலவிதமான பொருட்கள், பணிகள் மற்றவர்களுக்கு உரியது தான். உதாரணமாக, மக்களுக்கு பணியாற்றுவதற்காக அரசு பதவிகள், அதிகாரம் படைத்த பதவிகள், மக்களின் வரிப்பணம் – அனைத்துமே மற்றவர்களுக்குரியது. பொதுமக்களுக்குரியது. அந்த பதவியும், பணமும் ஒரு சிலரிடத்தில் கொடுக்கப்படுகிறது. எதற்காக? அதனை திறம்பட கையாண்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக. அந்த பணியைச் செய்வதில் நாம் நம்பத்தகுந்தவராய் இருக்கிறோமா? என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. பிறருக்கு உரிய இந்த பணிகளை எத்தனையோ மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, நம்மை ஆளக்கூடிய தலைவர்கள். அவர்களின் ஆட்சியில் பணிசெய்யக்கூடியவர்கள். பிறருக்கு உரிய இந்த பணிகளை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதின், இலட்சணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் மற்றவர்களைக் குறைசொல்லாமல், நாம் அந்த பணிகளில்...

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக...

அனைத்து ஆன்மாக்கள் தினம்

இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு தரக்கூடிய செய்தி என்ன? ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர், நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும், என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான், நாட்களை...

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும். இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள்...

எனை நான் கொடுத்தேன் இறைவா!!!

மற்றவர்களுக்கு கொடுக்கிற நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதை சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கொடுத்தலில் பல வகைகள் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பது முதல் வகை. இது ஏதோ நாம் செய்ய வேண்டியது என்பதுபோல, மற்றவர்களின் மீது இரக்கமில்லாமல் “ஏதோ” மனநிலையோடு கொடுப்பது. இது சரியானது அல்ல. எதிர்பார்த்து கொடுப்பது. இது ஒருவகையான முதலீடு போன்றது. இப்போது நான் கொடுக்கிறேன், எனக்குத்தேவை இருந்தால், எனக்கு ஏதாவது ஆதாயம் வேண்டுமென்றால் இதன் மூலம் சரிகட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பது இரண்டாம் வகை. இதுவும் சரியான பார்வை அல்ல. மதிப்பிற்காக கொடுப்பது. தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது. கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தங்களின் பலத்தை, அதிகாரத்தை, உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகக் கொடுப்பது. இதுவும் சரியான மனநிலை அல்ல. கடைசி வகை: உள்ளுணர்வால் உந்தப்பட்டு கொடுப்பது. யோசனையோடு அல்ல, எதிர்பார்த்து அல்ல, தன்னை...