Tagged: தேவ செய்தி

இறையாட்சி மலரட்டும்

இறைவனின் அரசு பற்றி பல்வேறு விதமான நம்பிக்கை, யூத மக்கள் நடுவில் உலா வந்தன. யூத மக்கள் இந்த உலகத்தைப் படைத்தது கடவுள் என்று நம்பினாலும், இந்த உலகத்தின் மீது அவர்களுக்கு மதிப்பு இருக்கவில்லை. காரணம், இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருப்பதாக எண்ணினர். இந்த உலகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் இந்த ஆவிகள் தான் காரணம் என்று நினைத்தனர். என்றாவது ஒருநாள் இந்த தீய ஆவிகளின் தொல்லைகளுக்கு முடிவு வரும் என்று நம்பினர். அந்த நம்பிக்கையான நாளைத்தான் இறையாட்சி என்று அவர்கள் எண்ணினர். இந்த புரிதலோடு தான், அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த பிண்ணனியை மனதில் கொண்டு தான், பரிசேயர்கள் இயேசுவிடம் இறையாட்சி எப்போது வரும் என்று கேட்கிறார்கள். இயேசு இறையாட்சி கண்களுக்கு புலப்படும் முறையில் வராது என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படி புரிந்து கொள்வது? இறையாட்சி என்பது ஒன்றை அழித்து, புது உலகை கட்டுவது...

ஆலயமும், வழிபாடும்

ஆலயம் எதற்காக இருக்கிறது? வழிபாட்டின் உண்மையான அர்த்தம் என்ன? ஆன்மீகம் வளர நமது வாழ்வை நாம் எப்படி அணுக வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளோடு, இன்றைய ஆலயங்களை, வழிபாட்டை, ஆன்மீகத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், நமக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும். காரணம், இன்றைய உலகில், பல ஆலயங்களில் ஆண்டவரை, கூவிக்கூவி வியாபாரம் செய்துகொண்டிருக்கிறோம். திருத்தலங்களைச் சுற்றுலாத்தலங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். எப்படியாவது வருவாயைப் பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், வழிபாடுகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். இறைவனையும், அவர் சார்ந்த இடங்களையும் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டவரை அனைவரும் அறிய வேண்டும் என்பதை விட, ஆலய வியாபாரம் பெருக வேண்டும் என்பதுதான், இன்றைய ஆலய பொறுப்பாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இன்றைக்கு நமது தமிழக திருச்சபையில் எத்தனையோ திருத்தலங்கள் இருக்கிறது.(கிட்டத்தட்ட சாதாரண ஆலயங்களையே பார்க்க முடியாத நிலையில், கிளைப்பங்குகளும் திருத்தலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது). இந்த திருத்தலங்களில் இருக்கிற பொறுப்பாளர்களில் எத்தனைபேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? அதை...

நம்பிக்கை வைப்போம்

நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? எது ஆழமான நம்பிக்கை? எது உண்மையான நம்பிக்கை? நாம் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எப்படி வாழ்வோம்? என்பதை, நமக்கு கண்கூடாக காட்டுவது தான், இன்றைய நற்செய்தி. நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை நல்ல முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த உறவைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். அந்த புரிதல் நமக்குள்ளாக இருக்கிறபோது, அந்த நம்பிக்கையைச் சிறப்பான விதத்தில் நாம் வாழ்ந்து காட்ட முடியும். கடவுளுக்கும், நமக்குமான உறவு என்ன? என்பதில் தான், அடிப்படைச்சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல் முழுமையாக, சரியான புரிதலோடு தீர்க்கப்பட்டால், அது எளிதானதாக மாறிவிடும். இன்றைய நற்செய்தி, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவை, தலைவர், பணியாளர் எடுத்துக்காட்டுக்களை வைத்து நமக்கு விளக்குகிறது. இங்கே, பணியாளர் என்பவர், கேள்வி கேட்பவராக இல்லை. பணியாளர் தலைவரை முழுமையாகப் பற்றிப்பிடிப்பவராக, அவருக்கு பணிவிடை செய்கிறவராக சித்தரிக்கப்படுகிறார். எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், பணியாளருடைய...

வழிகாட்டலும், வழிநடத்தலும்

பாவச்சோதனை வருவதை தடுக்க முடியாது என்று இயேசு சொல்கிறார். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகைப்படைத்தபோது அனைத்தும் நன்றாக இருந்தது எனக்கண்டார். ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” (தொடக்கநூல் 1: 31). ஆனால், அலகை பாம்பின் வடிவில் முதல் பெற்றோரை தனது நயவஞ்சகப்பேச்சினால் மயக்கி, இந்த உலகத்தில் பாவத்தை நுழைத்தது. அதுவரை நன்றாக இருந்த இந்த உலகம், முதல் மனிதனின் கீழ்ப்படியாமையால் பாவத்திற்கு இரையானது. இந்த உலகத்தில் சோதனை, தீமை இருப்பதை தவிர்க்க முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நாமே தீமையாக மாறிவிட முடியாது. நாமும் பாவத்திற்கு பலியாகி, மற்றவர்களையும் பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய தண்டனைக்குள்ளாக்கக்கூடிய பாவம். மற்றவர்களை இடறிவிழச்செய்வதும், மற்றவர்கள் இடறி விழ காரணமாவதும் மிகப்பெரிய குற்றம். . இந்தப்போதனை மக்களை வழிநடத்துகிற தலைவர்களுக்கு மிக மிகப்பொருந்தும். வழிநடத்துகின்ற பணி என்பது எளிதான பணி அல்ல. ஒவ்வொரு முடிவு எடுக்கின்றபோதும்,...

உயிர்ப்பில் நம்பிக்கை உண்டா ?

உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் இயேசுவின் காலத்தில் இருந்தனர். அவர்களே சதுசேயர். எனவே, உயிர்ப்பை மறுக்கும் வகையில் இயேசுவிடம் கேள்வி எழுப்புகின்றனர். இயேசுவோ மிகுந்த ஞானத்துடன் அவர்களுக்குப் பதில் கொடுக்கின்றார். நம் இறைவன் வாழ்வோரின் கடவுள். அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பில், மறுவாழ்வில் நம்பிக்கை என்பது அறநெறியியலுக்கு மிக அவசியமான ஒரு கோட்பாடு. உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் இவ்வுலக வாழ்விலும் நேர்மையோடு, அறநெறியோடு வாழ அதிகம் கடமைப் பட்டவர்கள். மறுவாழ்வில் நம்பிக்கை அற்றவர்கள் இவ்வுலக வாழ்வுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் இன்றியே வாழ்ந்துவிடலாம். உண்போம், குடிப்போம், நாளை மடிவோம் என்று இவர்கள் வாழ்ந்துவிடலாம். ஆனால், மறுவாழ்வில் நம்பிக்கை கொண்டோர் மறுவாழ்வுக்கான ஆயத்தப் பணிகளை இந்த உலகிலேயே செய்யக் கடமைபட்டுள்ளனர். இறந்தோரை சிறப்பாக நினைவுகூரும் இந்த மாதத்தில் நமது மறுவாழ்வு நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். உயிர்ப்பில் நம்பிக்கை இருந்தால், நமது வாழ்வு இன்னும் அதிக பொருள் உள்ளதாக அமையும்....