Tagged: தேவ செய்தி

மனம்மாற அழைப்புவிடுக்கும் புதுமைகள்

இன்றைக்கு ஏராளமான புதுமைகளும், அற்புதங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருப்பலியில் அப்பம், இயேசுவின் திரு உடலாக மாறக்கூடிய புதுமை, கன்னி மரியாளின் காட்சிகள், புனிதர்களின் பரிந்துரைகள் மூலமாக நோயாளிகள் குணமாகக்கூடிய புதுமைகள் என ஏராளமான புதுமைகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இந்த புதுமைகளின் நோக்கம் என்ன? எதற்காக புதுமைகள் நடக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடையாக வருவது தான், இன்றைய நற்செய்தி வாசகம். புதுமைகள் என்பது ஒருவரின் ஆற்றலை வெளிப்படத்தக்கூடியது அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு, கடவுள் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக அல்ல. கடவுளின் இரக்கத்தை நாம் அதிகமாகப் புரிந்து கொள்வதற்காக. நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்காகத்தான் புதுமைகள் நடந்தேறுவதாக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அறிய வருகிறோம். திருந்த மறுத்த நகரங்களில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அந்த புதுமைகள் கடவுளின் இரக்கத்தைக் குறித்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட புதுமைகள். மக்கள் கடவுளை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட புதுமைகள்....

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா

ஈனோக்கு எழுதிய நூல், ஏவபடாத நூலாக பார்க்கப்படுகிறது. எனவே அது விவிலியத்தின் ஒரு நூலாக இணைக்கப்படவில்லை. அது யூதப்பாரம்பரியத்திலிருந்து வந்த நூல். ஏவப்படாத நூலாக இருந்தாலும், விவிலிய வரலாற்றுப்பிண்ணனியை அறிந்து கொள்ள அது கொஞ்சம் உதவுகிறது. கடவுளுடைய திருமுன்னிலையில் ஏராளமான வானதூதர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதன்மைத் தூதுவர்களாக ஏழு பேர் இருக்கிறார்கள் என இந்த புத்தகத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். அவர்கள், கபிரியேல், மிக்கேல், இரபேல், உரியல், இரகுவேல், ரெமியேல், செரேகுவேல். அவர்களில் முதன்மைத்தூதுவர்களாக குறிப்பிடப்படுகிறவர்கள் இன்றைக்கு நாம் திருவிழாவைச்சிறப்பிக்கிற கபிரியேல், மிக்கேல், இரபேல். மிக்கேல் மற்றும் கபிரியேல் தூதுவர்கள் இஸ்லாம் சமயத்திலும், யூத சமயத்திலும் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக்க விவிலியத்தில் தோபித்து புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோபித்து புத்தகத்தை “உறுதிப்படுத்தப்பட்ட” புத்தகமாக மற்ற கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், இபேலையும் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கத்திருச்சபையின் பாரம்பரியப்படி, எண்ணற்ற தூதுவர்கள் கடவுள் திருமுன்னிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, ஆர்ப்பரித்து, கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே...

இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி (+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62 ) வாசகத்தின் சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது. இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான்,...

கடவுளின் அன்பு

இன்றைக்கு இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் பலபேர், கடவுளை பழிவாங்கக்கூடியவராக, கோபப்படக்கூடியவராக, இரக்கமில்லாதவராக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு உள்ள மனநிலை மட்டுமல்ல. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் மனநிலையும் கூட. தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சீடர்களுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது அவர்களை பழிவாங்கி, தங்களது ஆளுமையை நிலைநிறுத்த வேண்டும் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை தவறு என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் தன்னுடைய வல்லமையை, வலிமையை சாதாரண மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பதில்லை. அவர் அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அவர் மனிதர்கள் மட்டில் மிகப்பொறுமையோடு இருக்கிறார். கடவுள் எவ்வளவு தான் மனிதர்கள் மீது அன்பு வைத்திருந்தாலும், மனிதர்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக, கடவுள் அவர்கள் மீது கோபப்படவில்லை. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். அவர்கள் மீது கோபப்படும் தன்னுடைய சீடர்களை, அவர்களது செயல் தவறு என்பதை எடுத்துரைக்கிறார். காரணம்,...

பணிவிடை செய்யவே வந்தேன்

தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சீடர்கள் சண்டையிட்டுக் கொள்வது, இன்னும் அவர்கள் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும், அவரது பணியின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையும், தங்களது வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எதற்காக இந்த சண்டை எழுந்தது? தொடக்கத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சீடர்கள், திடீரென்று தங்களுக்குள்ளாக ஏன் சண்டையிட்டுக்கொள்கின்றனர்? இயேசுவை பல சீடர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுள் திருத்தூதர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர். இயேசுவிற்கு பணிவிடை செய்வதற்கு பெண் சீடர்களும் உடனிருந்தார்கள். இயேசு மூன்று சீடர்களை எப்போதுமே, உடன் அழைத்துச் செல்வதையும் நாம் நற்செய்தியின் ஆங்காங்கே பார்க்கலாம். பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேர் தான், அந்த சீடர்கள். அவர்களுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கும், அந்த மூன்றுபேரும் பெருமைப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இயேசு அவர்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்ற கேள்விக்கே இடமில்லை, என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார். யார் அதிகமாக பணிவிடை செய்கிறார்களோ,...