Tagged: தேவ செய்தி

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது. அது தான் கடவுள் வாழும் இல்லமாகவும், இஸ்ரயேல் மக்களின் அடையாளமாகவும் காணப்படுகிறது. எருசலேம் என்று சொல்கிறபோதும், சீயோன் என்று சொல்கிறபோதும், அவை இஸ்ரயேல் மக்களைக்குறிக்கக்கூடிய வார்த்தைகளாகவே நாம் பார்க்க வேண்டும். சீயோன் என்பது மலைத்தொடர். இதன் அருகில் தான் எருசலேம் இருக்கிறது. எனவே, இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளைத்தான் குறிப்பதாக இருக்கிறது. 2குறிப்பேடு 6: 6 சொல்கிறது: ”எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்து கொண்டேன் என்று ஆண்டவர் கூறுகிறார்”. எருசலேம் என்பது கடவுளின் இல்லம். அது கடவுளால் ஆளப்படுகிற இடம். கடவுள் தன்னுடைய முழுமையான பிரசன்னத்தையும் வெளிப்படுத்துகிற இடம். அந்த இடம் எதிரிகளால் தாக்கப்படவோ, தகர்க்கப்படவோ முடியாத இடமாகக் கருதப்பட்டது. அது கடவுளால் நிர்வகிக்கப்படும் கோட்டை. எனவே, அங்கு வாழக்கூடிய மக்களால் தான், கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக அனுபவித்திருக்க முடியும். அவர்களால் தான், கடவுளின் மாபெரும்...

என்னைவிட முன்னிடம் பெற்றவர் !

“பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்” (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். “இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” எனச் சான்று பகர்ந்தார். நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் (ளரஉஉநளளழசள) – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா? இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் “இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்” என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம்....

தேடுதலும் தங்குதலும் !

இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. “நேரமில்லை”, “பிசியாக இருக்கிறோம்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு...

மாசற்ற குழந்தைகள் திருவிழா

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில்...

யோவானின் விசுவாசம்

இயேசு அன்பு செய்த சீடர்களில் மூவருள் ஒருவர் யோவான். யோவான் மீது இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு நற்செய்தியையும், திருமுகத்தையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதியிருந்தாலும், யோவானைப்பற்றி அதிகமாக நற்செய்தி நூல்களில் நாம் காண முடியாது. ஆனால், யோவானுடைய விசுவாசம் அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி. ”யோவான் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக்கண்டார். ஆனால், உள்ளே நுழையவில்லை”. இந்த இறைவசனம் யோவானுடைய இறைநம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. அவருக்குப்பின்னால் சீமோன் பேதுரு வருகிறார். அவரும் குனிந்து பார்க்கிறார். ஆனாலும், அவர் உள்ளே செல்கிறார். இயேசுவின் துணிகள் கிடப்பதை யோவான் பார்த்ததும், அவருக்குள்ளாக பலவிதமான எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. துணிகள் கலைந்து காணப்படவில்லை. அப்படியே இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அப்படியே உயிர்ப்பை நம்புகிறார். அதாவது, நடக்கிற நிகழ்வுகளை விசுவாசக்கண்கொண்டு யோவான் பார்க்கிறதனால், அவரால் நம்ப முடிகிறது. நமது வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். விசுவாசம் இருந்தால் மட்டுமே நம்மால்,...