Tagged: தேவ செய்தி

அன்பை அடித்தளமாகக்கொண்டு வாழ்வோம்

இயேசு வாழ்ந்த காலத்தில், பாரம்பரிய யூதர்களுக்கு, கடவுளுக்கு பணிவிடை செய்வது என்பது, சட்டத்தை இம்மியளவு பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. எந்த அளவுக்கு சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு கடவுளை நாம் போற்றுகிறோம் என்று நினைத்தார்கள். சிறிய சட்டங்களையும், வாழ்விற்கும், இறப்பிற்குமான வழிகள் என்று, பயபக்தியோடு வணங்கினார்கள். சட்டங்கள் நம்மை நெறிப்படுத்த உதவுகின்றன, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது நாம் அடைய வேண்டிய இலக்காக இருக்க முடியாது. யூதர்களுக்கு சட்டத்தை திருப்தி செய்வதே நோக்கமும், ஆசையுமாக இருந்தது. அதை திருப்திபடுத்துவது நிச்சயம் முடியக்கூடியதாகத்தான் இருக்கும். ஆனால், இயேசு அன்பு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட அழைப்புவிடுக்கிறார். அன்புதான் நாம் அடைய வேண்டிய இலக்கு, என்பதை தெளிவுபடுத்துகிறார். அன்பிற்கு எல்லை இருக்க முடியாது. யாரும் அன்பை கொடுத்துவிட்டேன், என்று திருப்திபட முடியாது. கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு நீண்ட, முடிவில்லாத பயணம். அத்தகைய அன்பை நமது சட்டமாகக்கொண்டு...

பயன்தரக்கூடிய வாழ்க்கை

உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு சொல்கிறார். உப்பு எப்போதுமே தனது உப்புத்தன்மையை இழப்பதில்லை. அப்படியென்றால், இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார்? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம். “மிதிபடும்“ என்கிற வார்த்தைக்கும் ஓர் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு...

பயன்படுத்தும் வார்த்தைகள்

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல. இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். நாம் பொதுவாகப் பேசுவதற்கும்,...

கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வோம்

வாழ்க்கையிலே, புரிந்து கொள்ள முடியாத புதிர்களும், விடை காண இயலாத கேள்விகளும், நிறைய உள்ளன. அப்படிப்பட்ட புரிந்து கொள்ள முடியாத, நம் சிற்றரிவிற்கு எட்டாத கேள்விகளில் முதன்மையாக இருப்பது இன்று , திருச்சபையோடு நாம் இணைந்து கொண்டாடிக் கொண்டடிருக்கின்ற, மூவொரு கடவுள் பெருவிழா. ஒரே கடவுள் ஆனால், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற, மறை உண்மையைத்தான், மூவொரு கடவுள் என்று, நாம் கொண்டாடுகிறோம். இது புரிவதற்கு சற்று கடினமான ஒன்று. தந்தை கடவுளா? என்றால், நாம் ஆம், கடவுள் என்கிறோம். மகன் இயேசுவைக் கடவுள் என்றால், ஆம் என்கிறோம். தூய ஆவி கடவுள் என்றால், ஆம் என்கிறோம். ஆனால், மூன்று கடவுளா? என்றால், இல்லை, ஒரே கடவுள் என்கிறோம். ஏனென்றால், மூன்று பேருக்குமே, யாதொரு வேறுபாடுமின்றி, ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே திருவுளம், ஒரே கடவுள் தன்மை இருக்கிறது. எனவே, அவர்கள், மூன்று ஆட்களாக இருக்கிறார்கள் என்கிறோம். நாமும் குழம்பி,...

ஏழை எளியவர்களின் கடவுள்

மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள் மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ, அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள், என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது. சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய செயல்கள்,...