Tagged: தேவ செய்தி

பொறுப்பு

இஸ்ரயேல் நாடு கடவுளின் திராட்சைத்தோட்டமாகப் பார்க்கப்பட்டது. ”படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே” (எசாயா 5: 7). திராட்சைத்தோட்டங்கள் கரடிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட முள்வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல திராட்சைப்பழங்களிலிருந்து திராட்சைச்சாறு எடுக்க, ஒவ்வொரு திராட்சைத்தோட்டங்களிலும் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அதேபோல திருடர்களைக்கண்காணிக்கவும், வேலைசெய்கிறவர்கள் தங்கவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனம் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பகுதியாக இருந்தது. பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்க இயலாத இடமாக அது இருந்தது. எனவே, நிலக்கிழார்கள் திராட்சைத்தோட்டத்தை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, குத்தகைப்பணம் வாங்குவதில் மட்டும் தான் குறியாக இருந்தனர். குத்தகைப்பணம் மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் பெறப்பட்டது. பணமாகவோ, திராட்சைப்பழங்களாகவோ, விளைச்சலில் குறிப்பிட்டப்பகுதியாகவோ பெறப்பட்டது. இயேசு இந்த நற்செய்தியை சமயத்தலைவர்களுக்கு சொல்கிறார். அதாவது, எவ்வாறு இஸ்ரயேலை ஆண்டுவந்த தலைவர்கள் இறைவாக்கினர்களுக்குச்செவிசாய்க்காமல், இறுதியில் அவருடைய ஒரே மகனையே கொல்ல இருக்கிறார்கள் என்பதை இந்த உவமை நமக்கு அறிவிக்கிறது. நாம் தான் பொறுப்பாளிகள் என்பதற்காக, நாம் நினைத்ததைச்...

சீடர்களின் பயிற்சிக்காலம்

சீடர்கள் தங்களது பயிற்சி பணிக்காலம் முடிந்து ஆண்டவரிடத்தில் மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்கிறபோது, நம்பிக்கை இல்லாமல் சென்றார்கள். இயேசுவைப்போல தங்களாலும் புதுமைகள் செய்ய முடியுமா? மக்களின் எதிர்ப்புக்களை மீறி, நற்செய்தி அறிவிக்க முடியுமா? தங்களை மக்கள் மதிப்பார்களா? இயேசுவைப்போல ஞானத்தோடும், அறிவோடும் பேச முடியுமா? போன்ற பல கேள்விகள் சீடர்களின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. இயேசு அனைத்து சீடர்களும் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதனால், அவர்கள் தங்களுக்கு குறிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்கள். திரும்பி வருகிறபோது, அவர்களது அனுபவம் மகிழ்ச்சியானதாக இருக்கிறதை, சீடர்களின் உற்சாகமான வார்த்தைகளில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவிதமான பதற்றத்தோடு, பதைபதைப்போடு பணிக்குச் சென்ற சீடர்கள், மகிழ்ச்சியாக திரும்பி வந்தார்கள். இவ்வளவு நாள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடவுளின் பராமரிப்பைப்பற்றியும், அவரது அளவுகடந்த இரக்கத்தைப்பற்றியும் இயேசு சொல்வதை வெறுமனே கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அவர்களே நேரடியாக உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக...

மனம்மாற அழைப்புவிடுக்கும் புதுமைகள்

ன்றைக்கு ஏராளமான புதுமைகளும், அற்புதங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருப்பலியில் அப்பம், இயேசுவின் திரு உடலாக மாறக்கூடிய புதுமை, கன்னி மரியாளின் காட்சிகள், புனிதர்களின் பரிந்துரைகள் மூலமாக நோயாளிகள் குணமாகக்கூடிய புதுமைகள் என ஏராளமான புதுமைகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இந்த புதுமைகளின் நோக்கம் என்ன? எதற்காக புதுமைகள் நடக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடையாக வருவது தான், இன்றைய நற்செய்தி வாசகம். புதுமைகள் என்பது ஒருவரின் ஆற்றலை வெளிப்படத்தக்கூடியது அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு, கடவுள் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக அல்ல. கடவுளின் இரக்கத்தை நாம் அதிகமாகப் புரிந்து கொள்வதற்காக. நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்காகத்தான் புதுமைகள் நடந்தேறுவதாக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அறிய வருகிறோம். திருந்த மறுத்த நகரங்களில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அந்த புதுமைகள் கடவுளின் இரக்கத்தைக் குறித்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட புதுமைகள். மக்கள் கடவுளை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட புதுமைகள்....

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட...

இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62) சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது. இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான், தங்களது...