Tagged: தேவ செய்தி

அழைப்புக்கேற்ற வாழ்வு வாழுவோம்

யூதப்பாரம்பரியப்படி விருந்தினர்களுக்கு இரண்டு முறை அழைப்பு கொடுக்கப்படுகிறது. விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுவான ஒரு அழைப்பு முதலிலும், விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மற்றொரு முறையும் விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். முதல் முறையே அழைப்பு கொடுக்கப்படுவதால், விருந்தினர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டியது அவா்கள் காட்டும் மரியாதையைக் குறிக்கிறது. தயார் இல்லையென்றால், அழைப்பை அவமதிப்பதாக பொருள். இந்த விருந்து உவமை யூதர்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது. யூதர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். கடவுள் அவர்களை தனது இனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், கடவுளின் மகன் இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் பின்னால் அவர்கள் செல்லவில்லை. மாறாக, உதாசீனப்படுத்தினார்கள். எனவே, அவர்கள் அதற்கான விளைவை நிச்சயமாக சந்திக்க வேண்டும். இங்கு, விருந்தை உதாசீனப்படுத்திய அழைக்கப்பட்டவர்கள் தலைவரின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகிறார்கள். விளைவு பயங்கரமானதாக இருக்கிறது. கடவுளின் மகனை அடையாளம் கண்டுகொண்டு, கடவுளைப்பற்றிக்கொள்ளவில்லை என்றால், யூதர்களும் இதே விளைவைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொருவருமே...

உணர்விலிருந்து உண்மைநிலைக்கு….

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28) உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். உணர்வுகளால் உந்தப்பட்ட அவள், இயேசுவைப் பெற்றேடுத்த தாயைப்புகழ்கிறாள். உணர்வுகள் நல்லது தான். ஆனால், உணர்வு அளவில் நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, உண்மை நிலைக்கும், யதார்த்த நிலைக்கும் நாம் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தருகிறார். நம்முடைய வாழ்வில் உணர்வுகளை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறோம். அழுகையாக, சிரிப்பாக, கோபமாக, வெறுப்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். உணர்வு அளவிலே நாம் நின்று விடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து யதார்த்த நிலைக்கு, உண்மை நிலைக்கு செல்வதுதான் நம்முடைய பக்குவத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று. எந்த ஒரு நிகழ்வை நாம் வாழ்வில் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளா்த்துக்கொள்வதுதான் யதார்த்த நிலைக்கு செல்வது. இயேசு அந்தப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடவில்லை. உணர்வு அளவிலே தங்கிவிடவில்லை. அதனைக்கடந்து தெளிந்து நிலைக்குச் செல்கிறார். அதனை நாமும் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறார். இயேசு உணர்வு நமக்கு வேண்டாம்...

பொல்லாரின் வழியோ அழிவைத்தரும்

கடவுளின் முன்னிலையில் நிற்கக்கூடிய தகுதி யாருக்கு கிடைக்கும்? கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக இருக்கிறவர் யார்? என்கிற கேள்விகளை எழுப்பி, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை விதைக்கிறது இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6). இறைவனுடைய நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற்று, அவருடைய பிள்ளையாக வாழ வேண்டும் என்பதே, நம்முடைய வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அறிவுரையாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் தவறான வழிகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கவர்ந்திழுக்கிறதன்மை உடையதாகவும் இருக்கின்றன. நல்ல சிந்தனைகள், விழுமியங்கள் அவர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. தவறான வழியில் செல்கிறவர்கள் அழிவைத்தான் சந்திக்க வேண்டி வரும் என்கிற எச்சரிக்கை உணர்வை இந்த திருப்பாடல் அழுத்தமாக பதிவு செய்கிறது. நல்ல விதைகளும், பதரும் இருக்கிற இடத்தில் காற்று வீசுகிறபோது, பதர்கள் வெகு எளிதாக காற்றினால் அடித்துச் செல்லப்படும். நல்ல விதைகளைப் போல, பதரினால் நிலைத்து...

வாழ்வியல் செபம்

இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண...

நிலைவாழ்விற்கான போதனை

நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இயேசு அதற்கு எளிதான பதிலைத் தருகிறார். திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைச் செய், நீ நிலையான வாழ்வை பெற்றுக்கொள்வாய் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களின் நோக்கமும், குறிக்கோளும் நிலையான வாழ்வை அடைவதுதான் அதனை அடைவதற்காகத்தான் நாம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறோம். அதைத்தான், திருச்சட்ட அறிஞரின் கேள்வியும் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த கேள்வியை திருச்சட்ட அறிஞர் எதற்காக கேட்டார்? அவர் இந்த கேள்வியை கேட்கலாமா? ஏனென்றால், அவர் கடவுளின் சட்டத்தை அல்லும் பகலும் தியானிக்கக்கூடியவர். அதனை மக்களுக்குப் போதிக்கக்கூடியவர். இப்படி கடவுளின் வார்த்தையைப் போதிக்கக்கூடிய திருச்சட்ட அறிஞரே, நிலைவாழ்விற்கான வழியைத் தெரியாமல் இருந்தால், அவர் எப்படி மக்களுக்குப் போதிக்க முடியும்? இன்றைக்கு போதனை என்பது அடுத்தவர்க்கு மட்டும் தான், எனக்கு இல்லை என்கிற மனநிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய...