மன மாற்றம்..
மக்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தி பண்டைக்காலத்தில் எசாயா இறைவாக்கினர் கூறிய செய்தியை எதிரொலிக்கிறது. ”ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” (காண்க, எசா 40:3) என எசாயா அன்று கூறியது பாபிலோனிய அடிமைநிலையிலிருந்து மக்கள் விடுதலை பெற்ற நல்ல செய்தியை முன்னறிவித்தது. உண்மையிலேயே அது ஒரு புதிய ”விடுதலைப் பயணமாக” அமைந்தது. யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கின்ற குரலாக வந்தார்; வரவிருக்கின்ற மெசியாவின் வருகையை அறிவித்தார். உண்மையிலேயே அவர் கடவுளின் குரலாகச் செயல்பட்டார். அதே நேரத்தில் அவர் மணமகனாகிய இயேசுவின் தோழனாகச் செயல்பட்டு அம்மணமகனைப் பாலைநிலம் வர அழைக்கும் குரலானார். யோவான் அறிவித்த மனமாற்றம் எதில் அடங்கியிருக்கிறது? தவறான வழியில் செல்வோர் தாங்கள் செல்ல வேண்டிய வழி இன்னொன்று என்று தெரிந்ததும் உடனே திரும்பி சரியான வழியில் நடக்கத் தொடங்குவர். இதையே யோவான் மக்களிடம் கேட்டார். எனவே மனமாற்றம் என்பது தவற்றைக் களைந்து நல்லதைத் தழுவுவது என்னும் பொருள்கொண்டது. மனமாற்றம்...