Tagged: தேவ செய்தி

அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75 செக்கரியா கடவுளை மீட்பராக அறிமுகப்படுத்துகிறார். செக்கரியா ஆலயத்தில் பலி செலுத்தக்கூடிய குருவாக இருக்கிறார். சாதாரண மக்களை விட, அவருக்கு திருச்சட்டத்தைப் பற்றிய அறிவுத்தெளிவு அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களை விட, நடக்கிற நிகழ்வுகளை, உன்னிப்பாக பார்ப்பது அவருக்கு இயல்பானது. ஏனென்றால், இஸ்ரயேல் வரலாற்றையும், வாக்களிப்பட்ட மீட்பரையும், அவர் வரவிருக்கிற நேரத்தையும் அவரால் கணிக்க முடியும். அதைத்தான் இறைவாக்காக இன்றைய பாடல் வழியாக அவர் உணர்த்துகிறார். செக்கரியாவைப் பொறுத்தவரையில் காலம் கனிந்துள்ளதாகச் சொல்கிறார். என்ன காலம் கனிந்துள்ளது? கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து, நோய்நொடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பு அளிக்க இருப்பதாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கடவுள் மக்களை அனைத்து அடிமைத்தனத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க இருக்கிறார். அது நடக்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தவராக, அந்த செய்தியை அறிவிக்கிறார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த மெசியா...

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன? தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள்...

ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை கடவுள் நினைவுகூர்ந்தார்

திருப்பாடல் 105: 6, 7, 8, 9, 42 – 43 கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையாக இருக்கிறவர். அவர்களோடு உடன் பயணிக்கிறவர். அதற்கு அடித்தளமாக இருப்பது கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதி. கடவுள் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? யாரோடு வாக்குறுதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்? தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வாசிக்கிறோம்: ”உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியா விளங்குவாய்”. ஆக, கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொண்டு, இந்த உலகத்திற்கு அவரிலிருந்து தோன்றுகிற இனம் ஆசீர்வாதமாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார். அவரது வாக்குறுதியின்படியே அவர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துகிறார். அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்கிறார். அவர்களுக்கு நாட்டை வழங்குகிறார். எதிரிகளை அடிபணியச் செய்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்....

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில்...

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7) வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல். மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால்,...