Tagged: தேவ செய்தி

கொடுங்கள்! கொடுக்கப்படுவீர்கள்!

இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, மிகப்பெரிய கூட்டம் இயேசுவைத்தேடி வருகிறது. வந்திருந்தவர்கள் அனைவருமே இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள். இன்னும் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவைப் பயன்படுத்துகிறவர்கள். அவர் சொல்வது அவர்கள் உள்ளத்தை சென்றடைந்ததா? இல்லையா? தெரியவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தங்களத தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்திருக்கிறவர்கள் தான். வந்திருக்கிறவர்களில் யாரும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்ததாகத் தெரியவில்லை. உண்மைதான். ஒரு சில தேவைகள் கடவுளால் மட்டும்தான் நிறைவேற்றித்தர முடியும். கடவுள் நமக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர் தான். கடவுளிடமிருந்து மட்டும்தான் நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், கொடுப்பதும் அன்பின் அடையாளம் தான். இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைப் பெற்றிருந்தும், இயேசுவுக்கு துன்பம் வந்தபோது, அவரோடு யாரும் இல்லை. இது, இயேசுவை மற்றவர்கள் வெறுமனே பயன்படுத்தினார்கள் என்பதாகத்தான் நாம் எண்ண முடியும். இன்றைக்கு ஆலயத்திற்கு எத்தனையோ பேர் வருகிறோம். வருகிற அனைவருமே, கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வருகிறோமே ஒழிய, கடவுளுக்கு...

இருளில் ஒளியென மிளிர்வர்

திருப்பாடல் 112: 4 – 5, 6 – 7, 8 – 9 யார் இருளில் ஒளியென மிளிர்வர்? திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்: நீங்கள் கடவுளுக்கு பயந்து வாழ்கிறபோது, இருளில் ஒளியாக மிளிர்வீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களில் பெரும்பாலானோர் ”பத்தோடு ஒன்று பதினொன்று” ரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு முக்கியமான காரணம், அப்படி வாழவில்லை என்றால், இந்த உலகத்தை விட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் தான். இந்த உலகம் தனக்கென ஒரு சிலவற்றை மதிப்பீடுகள் என்ற பெயரில் வைத்திருக்கிறது. ஆனால், அவை கடவுள் பார்வையில் அநீதியானவை. இந்த உலக மதிப்பீடுகளை வாழ்கிறவர்கள், நிச்சயம் கடவுள் பயம் இல்லாதவர்கள். அதனால் தான், அவர்களால் துணிவோடு மற்றவர்களின் உயிரை எடுக்க முடிகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணமுடிகிறது. மற்றவர்களின் பொருளைச் சுரண்ட முடிகிறது. இப்படியாக, கடவுள் பயம் இல்லாத உள்ளத்தில்,...

பணிவாழ்வில் ஓய்வு

திருத்தூதர்கள் தங்களின் நற்செய்திப்பணி முடிந்து திரும்பி வருகின்றனர். இயேசு அவர்களை ஓய்வெடுப்பதற்கு பணிக்கிறார். ஏற்கெனவே களைப்பாய் இருந்தவர்கள் உண்பதற்கு கூட நேரம் இல்லாதவர்களாய் இருப்பதைப்பார்த்து, இயேசுவே அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறார். அவர்கள் ஓய்வுக்கு நேரம் கொடுக்கிறார். நமது கிறிஸ்தவ வாழ்வு என்பது பணியும், ஓய்வும் கலந்த வாழ்வு என்பதை இயேசு இங்கே கற்றுத்தருகிறார். கடவுளின் பணிக்காக முழுமையாக நம்மை அர்ப்பணித்து தொடர்ந்து உழைக்கிறோம். அதேபோல ஓய்வுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். இங்கே ஓய்வு என்பது உடல் சார்ந்த களைப்பிலிருந்து விடுபடக்கூடியது மட்டும் அல்ல. மாறாக, நமது அர்ப்பணத்தை இன்னும் அதிகமாக்குவதற்கான ஒரு கால அவகாசம். ஒரு சுய ஆய்வு. நமது ஆன்மீக வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்பதற்கான ஒரு ஆய்வு. நமது வாழ்வை கடவுளுக்கு இன்னும் ஆழமாக அர்ப்பணமாக்குவதற்கான ஒரு முயற்சி. எந்த அளவுக்கு நம்மையே வருத்தி பணிசெய்கிறோமோ, அதே அளவுக்கு கடவுள் முன்னிலையில் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக இருந்து,...

நமது கடமையைச் செய்வோம்

இயேசுவைப்பற்றி ஏரோது அரசன் கேட்பது சற்று அதிசயமாக இருக்கிறது. ஏரோது ஓர் அரசன். இயேசுவோ சாதாரண தச்சரின் மகன். ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இயேசுவைப்பற்றி, ஏரோதுக்கு எப்படி தெரிய வருகிறது? இயேசுவின் சீடர்கள் இப்போதுதான், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த நற்செய்தி மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான், இந்த நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பணிவாழ்வு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற அழுத்தமான செய்தியை, நற்செய்தி நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. ஏரோது அதை எதிர்மறையாகத்தான் பார்க்கிறான். காரணம், அவனுக்கு திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியும், தனது பதவி போய்விடுமோ? என்கிற பய உணர்வும் அதிகமாக அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நாம் நியாயமாக, நேர்மையாக இருக்கிறபோது, யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இன்றைக்கு ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம்? என்ன...

வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….

இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல,...