இறையனுபவம்
1அரசர்கள் 19: 9, 11 – 16 இன்றைய வாசகம் “இறையனுபவம் என்றால் என்ன?“ என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக பல இடங்களுக்கு, பல இலட்சங்களை செலவு செய்து மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இறைவனை அந்த இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியுமா? இங்கே தரிசிக்க முடியுமா? என்று அங்கலாயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைதியில் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார், அமைதியில் தான் இறைவனை அனுபவித்து உணர முடியும் என்பது இன்றைய வாசகத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் தன்னை எலியா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே, ”வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!” என்று சொல்கிறார். சுழற்காற்று எழும்புகிறது. அதில் ஆண்டவர் இல்லை. காற்று பிளந்து பாறைகளைச் சிதறடிக்கிறது. அதிலும் இறைவன் இல்லை. இறுதியாக, அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதில் தான், இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக, கோடி கோடியாக செலவழித்துக் கட்டும் ஆலயங்களிலோ, சடங்கு,:...