இறைவனும், இரக்கமும்
விடுதலைப்பயண நூல் 16: 2 – 4, 12 – 15 இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக எகிப்திலிருந்து வழிநடத்தினார். அவர்களை பாலைநிலத்திற்கு அழைத்து வந்தபோது, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் துன்பக்குரலைக் கேட்டு மனமிரங்கி இறைவன் அழைத்து வந்திருக்கிறாரே? என்று, மக்கள் நன்றியுணர்வு கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் மோசேக்கு எதிராகவும், ஆரோனுக்கு எதிராகவும் அற்பக்காரியங்களுக்காக வெகுண்டெழுகிறார்கள். இவ்வளவு கடினப்பட்டு, கடலைக் கடந்து வழிநடத்தி வந்த இறைவன், தங்களைக் கைவிட்டு விட மாட்டார் என்கிற சிந்தனை அவர்களின் எண்ணத்தில் கூட இல்லாதது வேதனையிலும் வேதனையே. ஆனாலும், இறைவன் பொறுமையாக இருக்கிறார். அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக, அவர்களின் முறையீட்டிற்கு என்ன செய்யலாம்? அதற்கு ஆவண செய்கிறார். “மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை, இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்” என்று, அவர்களுக்கு செய்தி தருகிறார். அவர் சொன்னது போலவே,...