Tagged: இன்றைய வசனம் தமிழில்

இயேசுவின் பிறர்நலம்

தற்பெருமை நிறைந்த உலகம் இது. இங்கே வாழக்கூடிய தலைவர்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். தங்களோடு சில முகஸ்துதிகளை வைத்துக்கொண்டு, அவர்களின் புகழ்ச்சி மழையில் இன்பம் காண்கின்றனர். தாங்கள் செய்வதையும் புகழ்ச்சிக்காகவே செய்கின்றனர். இந்த உலகத்தில் உதவி செய்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்பெருமைக்காகச் செய்பவர்கள் 2. தன்னை வளா்த்துக் கொள்வதற்காகச் செய்கிறவர்கள் 3. தன்னலமில்லாமல் செய்கிறவர்கள். தற்பெருமைக்காகச் செய்கிறவர்கள், தங்களது பெயர், புகழ் மற்றவர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதைச்செய்தாலும் தாங்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. தன்னை வளர்த்துக்கொள்வதற்காகச் செய்கிறவர்கள் எதிர்பார்த்து செய்கிறவர்கள். இன்றைக்கு நான் இதைச்செய்கிறேன் என்றால், நாளை இது எனக்கு கிடைக்கும், என்கிற எதிர்பார்ப்போடு செய்கிறவர்கள் தான் இவர்கள். மூன்றாவது வகையான மக்கள் எதையும் எதிர்பார்க்காமல், புகழுக்காக அல்லாமல், நன்மையைச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறவர்கள். இயேசு இந்த மூன்றாம் வகையைச்...

மூவொரு இறைவன் பெருவிழா

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து...

சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் ‘சூழ்நிலை’. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர். இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை...

பலிப்பொருளாக மாற…….

யூதச்சட்டப்படி எந்தவொரு பொருளும் கடவுளுக்கு காணிக்கையிடப்படுவதற்கு முன்னால் உப்பிடப்பட வேண்டும். லேவியர் 2: 13 சொல்கிறது: “நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப்படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக்குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.” இந்த பலி செலுத்தப்படுகிற உப்பு, உடன்படிக்கையின் அடையாளமாகும். ஏனெனில் எண்ணிக்கை 18: 19 ல், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உப்பு உடன்படிக்கையைப்பார்க்கிறோம்: “இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள ‘உப்பு உடன்படிக்கை’ ஆகும். ஆக, படையல்களில் உப்பு சேர்ப்பது ஆண்டவர்க்கு உகந்த பலியாய் இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகிறார்: “பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்” (மாற்கு 9: 49). இங்கே நெருப்பு என்ற வார்த்தைக்கு தூய ஆவியை நாம் ஒப்பிட்டுப்பேசலாம்....

இயேசு – அனைவருக்கும் சொந்தம்

இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருக்கிறது என்று நம்பினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு ஏராளமான மந்திரவாதிகளும் இருந்தனர். அவர்களின் நம்பிக்கைப்படி, ஒருவனிடம் தீய ஆவி இருந்து, அந்தத்தீய ஆவியை ஓட்ட, அந்தத்தீய ஆவியைவிட வலிமையான ஆவியின் பெயரால் கட்டளையிட்டால், அந்த தீய ஆவி பணிந்து ஓடிவிடும். அந்தப்பெயரைக் கண்டுபிடித்துவிட்டால் பேயை எளிதாக ஓட்டிவிடலாம். இப்படித்தான் பொதுவாக தீய ஆவிகளை மக்கள் மத்தியில் வாழ்ந்த மந்திரவாதிகளும், போதகர்களும் செய்துவந்தனர். இங்கே நற்செய்தியில் காணப்படுவதும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான். யோவான் இயேசுவிடம் தங்களைச்சாராத ஒருவர் இயேசுவின் பெயரைப்பயன்படுத்தி தீய ஆவிகளை ஓட்டுவதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால், இயேசுவோ ‘நமக்கு எதிராக இராதவர், நம்மோடு இருக்கிறார்’ என்று அவருக்கு பதில்சொல்கிறார். அதாவது, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறவர்களுக்கு கடவுள் நிச்சயம் உதவுவார் என்பதுதான் இயேசு இங்கே கற்றுத்தருகிற பாடம். குறிப்பிட்ட நபர்தான் நன்மை செய்ய வேண்டும் என்றில்லை....