Tagged: இன்றைய வசனம் தமிழில்

பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்

பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது. இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது. யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன. அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது....

இன்பமும், துன்பமும்

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து, ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும், வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. இன்பமோ, துன்பமோ வாழ்வில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை தான், இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குத்தரப்படுகிறது. வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம். எப்போதும் ஒரே போல இருக்காது. யோவான் சிறையில் இருக்கிறார். அவரின் சீடர்களுக்கு இப்போது துன்பமான நேரம். ஆனால், இந்த துன்பமும் நிரந்தரமல்ல. காலம் மாறும். இந்த துன்பமும் நீங்கும். அதேபோல இயேசுவின் சீடர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். காரணம், இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்கள் துன்பத்தை சந்திக்கும் காலம் வரும். துன்பம் வரும் என்பதற்காக, இப்போதுள்ள இன்பமான நேரத்தை கவலையில் மூழ்கடிக்கக்கூடாது. மகிழ்ச்சியான நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துன்பம் என்பது நமக்கு வாழ்வில் பல பாடங்களைக் கற்றுத்தரக்கூடியது. துன்பத்தை...

தூய லூர்தன்னைப் பெருவிழா

இந்த விழா பிப்ரவரி 11ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது அன்னை மரியாள் பெர்னதெத் சூபிரெஸ் என்ற சிறுமிக்கு, காட்சி அளித்ததை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதுவும் பிப்ரவரி 11 முதல் ஜீலை 16, 1858 வரையில் இந்த காட்சியானது, அவளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை மரியாளின் காட்சியளிப்பு என்று முதலில் கொண்டாடினர். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இதை தூய லூர்தன்னை நினைவு விழா என்று பெயரிட்டு, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மாற்றியமைத்தது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிருஸ். 1858 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்கச் சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்தவேளையில் பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். அன்னை மரியாள் அழகிய இளம்பெண்ணாக அந்தக் குகையில் தோன்றினார். வெண்ணிற ஆடையை உடுத்தியிருந்தார். முக்காடும் அணிந்திருந்தார். நீலநிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். அவரது கையில் ஒரு...

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது...

கொடுங்கள்! கொடுக்கப்படுவீர்கள்!

இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, மிகப்பெரிய கூட்டம் இயேசுவைத்தேடி வருகிறது. வந்திருந்தவர்கள் அனைவருமே இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள். இன்னும் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவைப் பயன்படுத்துகிறவர்கள். அவர் சொல்வது அவர்கள் உள்ளத்தை சென்றடைந்ததா? இல்லையா? தெரியவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தங்களத தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்திருக்கிறவர்கள் தான். வந்திருக்கிறவர்களில் யாரும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்ததாகத் தெரியவில்லை. உண்மைதான். ஒரு சில தேவைகள் கடவுளால் மட்டும்தான் நிறைவேற்றித்தர முடியும். கடவுள் நமக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர் தான். கடவுளிடமிருந்து மட்டும்தான் நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், கொடுப்பதும் அன்பின் அடையாளம் தான். இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைப் பெற்றிருந்தும், இயேசுவுக்கு துன்பம் வந்தபோது, அவரோடு யாரும் இல்லை. இது, இயேசுவை மற்றவர்கள் வெறுமனே பயன்படுத்தினார்கள் என்பதாகத்தான் நாம் எண்ண முடியும். இன்றைக்கு ஆலயத்திற்கு எத்தனையோ பேர் வருகிறோம். வருகிற அனைவருமே, கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வருகிறோமே ஒழிய, கடவுளுக்கு...