Tagged: இன்றைய வசனம் தமிழில்

ஏழைகளாய் வாழ்வோம்

ஒரு யூதக்குடும்பத்தில் ஆண்குழந்தை பிறக்கின்றபோது, ஒருசில சடங்குகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. முதலில், குழந்தை பிறந்த எட்டாம் நாள் அதற்கு விருத்தசேதன சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்(லேவியர்12: 3). இரண்டாவது, தலைப்பேறு ஆண்குழந்தைகள் அனைத்தும் ஆண்டவருக்குரியது. விடுதலைப்பயணம் 13: 2 ல் பார்க்கிறோம்: “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத்திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”. இதற்கான காரணம்: எகிப்தில் பார்வோன் மன்னனின் கடின உள்ளத்தின் பொருட்டு அனைத்து ஆண் தலைப்பேறுகளும் இறந்துபோயினர். ஆனால், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களின் ஆண் மகன்களைக் காப்பாற்றினார். எனவே, எல்லாத்தலைப்பேறுகளையும் இறைவன் தனக்கெனத் தேர்ந்துகொண்டார். அவர்கள் கடவுளுக்கு உரியவர்களாயினர். அவர்களை மீட்பதற்கும் சடங்குகளை வகுத்திருந்தனர். எண்ணிக்கை 18: 15 – 16 “மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப்படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது. ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய். அவற்றின் மீட்புத்தொகை ஐந்து வெள்ளிக்காசுகள்”(ஒரு மாதக்கூலிக்கு சமம்). மூன்றாவது,...

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்

காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம். தீய...

சொந்தங்களின் புறக்கணிப்பு !

இயேசு தம் சொந்த ஊருக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்ட நிலையை இன்றைய நற்செய்தி வாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. ”இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று இயேசுவே தம் ஊர் மக்களிடத்தில் சொல்கின்றார். இயேசுவின் குடும்பத்தை, பின்னணியை, சுற்றத்தை நன்கு அறிந்தவர்கள் நாசரேத் ஊர் மக்கள். அந்த அறிமுகமே அவரை ஏற்றுக்கொள்வதற்கும், அவரது நற்செய்தியை நம்புவதற்கும் தடையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவர்கள் அவரது செய்தியைப் புறக்கணிக்கின்றனர். நமது வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம். நமது சொந்த வீட்டினர், குடும்பத்தினர், உறவினர்களே நமது அருமையை, திறமைகளை உணராமல், அறியாமல் நம்மை இகழ்ந்து ஒதுக்கிய நிலை நமக்கு ஒருவேளை கிடைத்திருக்கலாம். நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம். அடுத்த முறை நன்கு அறிமுகமான நபர்களின் ஆளுமையை, ஆற்றல்களை, சிந்தனைகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்;கொள்ள முன்வருவோம். அறிமுகமே முற்சார்பு எண்ணங்களைத் துhண்டி, உறவை முறித்துவிடாதபடி, தவறான தீர்ப்புகளுக்கு நம்மைத் தள்ளிவிடாதபடி கவனமாயிருப்போம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே...

ஆழமான விசுவாசம்

கலிலேயா கடல் ஒரு சில விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. எப்போது புயல் அல்லது கடுமையான காற்று வீசும் என்று தெரியாத அளவுக்கு, தீடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக்கடல். பொதுவாக புயல் சின்னம் உருவாவதை இயற்கையின் அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். வானம் மேகமூட்டமாகத்தோன்றும். காற்று வழக்கத்திற்கு மாறாக பலமாக வீசும். ஆனால் கலிலேயக்கடல் இதிலிருந்து வேறுபட்டது. வானம் தெளிவாக இருந்தாலும், காற்றே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் அதனை நம்பி புயல் வருவதற்கில்லை என்று ஒருவராலும் அறுதியிட்டுச்சொல்ல முடியாது. கலிலேயா கடல் அமைந்திருக்கின்ற அந்த இட அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.அதேபோல எப்போது புயலும், காற்றும் ஓயும் என்பதையும் பருவநிலை மாற்றத்தை வைத்து அறுதியிட்டுச்சொல்ல முடியாது. சீடர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத்தெரியும். எனவே, சாதாணமானச்சூழ்நிலை என்றால் அவர்கள் இயேசுவின் உதவியை நாடியிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வே கடல்தான். ஆனால், இயேசுவோடு பயணம் செய்த அன்றைக்கு கடலில்...

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில்...