Tagged: இன்றைய வசனம் தமிழில்

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது...

கடவுள் நம் அனைவரின் தந்தை

யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது. இந்த கடவுளின் அன்பை நாம் நமது மனித இயல்பில் புரிந்து கொள்ளவே முடியாது. அதனை புரிந்து கொள்வதற்கான ஆற்றல், நமது அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறார். இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரையும் தனது பிள்ளைகளாகப் பாவிக்கிறார்....

நிறைவைத்தேடி…

நிறைவு என்பதுதான் இந்த உலகத்தில் அனைவரும் தேடி அலைகின்ற ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் நிறைவை பலவற்றில் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவு இல்லாமல் நமது தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பலர், நிறைவைத்தராதவற்றில் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு நிறைவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். நிறைவு இதில் இல்லை என்று பலர் சொல்லியும், அதனைக் கேட்காமல் தொடர்ந்து அதிலே மூழ்கிக்கொண்டிருக்கிறோம். நாம் எதில் நிறைவைத்தேட வேண்டும் என்பதை நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார் என்று நற்செய்தி சொல்கிறது. அதற்கான காரணத்தையும் அது தருகிறது. விண்ணகத்தந்தை மற்றவர்களை மன்னிக்கிறார். அனைவரையும் அன்பு செய்கிறார். அனைவரையும் பராமரிக்கிறார். அனைவரையும் தனது பிளளைகளென சமமாகப் பாவிக்கிறார். எனவே தான், விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார். நாமும் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல, நிறைவுள்ளவராக இருக்க வேண்டுமென்றால், மற்றவர்களை மன்னிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். இந்த உலக செல்வத்திலும், பதவியிலும், அதிகாரத்திலும் நாம் பெற முடியாத...

குறைவான மன்னிப்பு, குறைவான அன்பு !

பாவியான பெண்ணை இயேசு மன்னித்து, அவருக்கு ஆதரவாகப் பேசும் பகுதியை இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-8: 3) வாசிக்கக் கேட்கிறோம். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் என்னும் இயேசுவின் நிறைவான சொற்கள் அன்புக்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன. அன்பு திரளான பாவங்களைப் போக்குகிறது என்னும் பேதுருவின் மொழிகள் இங்கு நினைவுகூரத்தக்கவை. நமது பாவங்கள் அதிகமாக இருந்தால், நமது அன்புச் செயல்களை அதைவிட அதிகமாக்கிக் கொள்வதுதான் மன்னிப்புப் பெறுவதற்கான வழி. குறைகளோ, குற்றங்களோ இல்லாத மனிதர் நம்மில் எவருமே இலர். எல்லாருமே பாவிகள்தாம். எனவே, பாவங்களிலிருந்து விடுதலை பெறவும், மன்னிப்பு அடையவும் இயேசு சுட்டிக்காட்டும் வழி அன்புதான். இறைவனை, நம் அயலாரை, நமக்குத் துன்பம் செய்வோரை நாம் அன்பு செய்ய முன் வந்தால், நமது பாவங்களை...

கடவுளின் பிரசன்னம்

விடுதலைப்பயணம் 20: 7 ல் பார்க்கிறோம்: “உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்”. எண்ணிக்கை 30: 3 சொல்கிறது: ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால், அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்”. இணைச்சட்டம் 23: 21 ல் பார்க்கிறோம்: “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்கு காலந்தாழ்த்தாதே. ஏனெனில் அது உனக்குப் பாவமாகும். இவையெல்லாம் கடவுள் பெயரால் செய்யப்படும் உறுதிமொழிகளைப்பற்றிச் சொல்லப்படுவது ஆகும். இயேசு வாழ்ந்த காலத்தில் பொய்யாணை பற்றி இரண்டு விரும்பத்தக்காத செயல்கள் நடைபெற்று வந்தன. 1. தேவையில்லாத காரணங்களுக்கெல்லாம் மக்கள் ஆணையிட்டனர். மிகவும் சாதாரணமாக ஆணையிடுவதை எடுத்துக்கொண்டனர். 2. கடவுள் மீது ஆணையிடுதல். கடவுள் மீது ஆணையிடுவதை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது....