Tagged: இன்றைய வசனம் தமிழில்

இறைவனின் நீதி !

நீதி என்பது என்ன? ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் கிடைத்திருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர். ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை...

தகுதியைத் தருகிறவர் கடவுள்

குறைகள் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. நம் எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. ஆனால், கடவுளிடமிருந்து நமது குறைகளை மறைத்து விடலாம், கடவுளிடமிருந்து தப்பிவிடலாம் என்றால், அது இயலாத காரியம் என்பதற்கு இந்த வாசகம் சிறந்த சாட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்வியலோடு, ஒப்புமை செய்து பார்க்கக்கூடிய பகுதியாக இன்றைய பகுதி அமைகிறது. திருமண விருந்திற்கு பல மனிதர்கள் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்திருக்கும். ஏனென்றால், பாலஸ்தீனப்பகுதியில் திருமண விழா என்பது குடும்ப விழா போன்றது அல்ல. அது ஒட்டுமொத்த சமுதாய விழா. அது தனிநபர் விழா அல்ல. அனைவரின் விழா. மணமக்களின் மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த ஊரினரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படிப்பட்ட விழாவில் ஒட்டுமொத்த விருந்தினர்களும் பங்கேற்றிருக்கிறபோது, ஒரு மனிதர் மட்டும், தனியே பிரிக்கப்படுகிறார். அவ்வளவு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு நடுவில், அவர் மட்டும் தனியே தென்படுகிறார். வெளியே அனுப்பப்படுகிறார். குறைகளை வைத்துக்கொண்டு நாம் மற்றவர்களை ஏமாற்றிவிடலாம்....

வாக்குறுதி மாறாத கடவுள்

கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது. ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை...

எச்சரிக்கை உணர்வு

இந்த உலகம் என்பது ஒரு சத்திரம் போன்றது. ஒரு சத்திரத்தில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். அவர்களுக்கான உணவையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம். அங்கே தங்கி இளைப்பாறவும் செய்யலாம். ஆனால், யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. நமது தேவை முடிந்தவுடன், நமது பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சத்திரம் நமக்கான நிலையான இடம் கிடையாது. நமக்கென்று, நாம் வாழ்வதற்கென்று அருமையான இல்லம் இருக்கிறது. அது போல, இந்த பூமியில் நமது வாழ்வு நிலையான வாழ்வல்ல. இது ஒரு பயணத்தில் நாம் சந்திக்கின்ற சத்திரம் போன்றது. இதற்கு நாம், நிலையாக இருப்பது போல, உரிமை கொண்டாட முடியாது. இந்த மனநிலையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத்தரும் அழைப்பு. இயேசுவின் வார்த்தைகள், செல்வந்தர்களைப்பற்றி கடினமானது என்றாலும், அது அவர்களைத் தீர்ப்பிடுவது அல்ல. ஏனென்றால், செல்வந்தர்களாக இருந்து, இயேசுவின் நன்மதிப்பைப்பெற்றவர்களும் இருக்கிறார்கள். சக்கேயு மிகப்பெரிய செல்வந்தர். ஆனால், இயேசு கொடுக்கும் மீட்பைப்பெற்றுக் கொண்டார். அரிமத்தியா...

மரியாளின் விண்ணேற்பு

நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும். திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்சிமையில் பங்குபெற்றார். மரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை...