Tagged: இன்றைய வசனம் தமிழில்

கள்ளங்கபடற்ற வாழ்வு

இன்றைக்கு தாய்த்திருச்சபை திருத்தூதர்களுள் ஒருவரான பர்த்திலேமேயுவின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவருடைய இயற்பெயர் நத்தனியேலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் பர்த்திலேமேயு என்று அழைக்கப்படுவதற்கு, இவர் தால்மேயுவின் மகன் என்பதான அர்த்தம் காரணமாகும். தால்மேயு என்பவன் கி.மு.10ம் நூற்றாண்டின் ஜெஸ்ஸே என்கிற பகுதிக்கு அரசனாவான். அவரது மகளை பேரரசர் மணந்திருந்தார். எனவே, பர்த்திலேமேயு அரசர் வழிவந்த குடும்பம் என்பதற்கு, நற்செய்தியாளர்கள் இந்த பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது, விவிலிய அறிஞர்களின் கருத்து. இவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதும், நமக்கு கொடுக்கப்படுகிற ஊகச்செய்தி. இவரை இயேசு கள்ளம், கபடற்றவர் என்று சொல்வதிலிருந்து, இவரை இயேசு எந்த அளவுக்கு அறிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பர்த்திமேலேயு-க்கு மிகப்பெரிய ஆச்சரியம். அதேவேளையில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும். காரணம், தான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை, இந்த உலகம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும், இயேசு அவரை அங்கீகரித்திருக்கிறார் என்பது, நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கும்....

வீண் ஆடம்பரங்களைத் தவிர்ப்போம்

யூதர்கள் தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். உண்ணும் உணவிலும், உடலிலும், பயணத்திலும் தூய்மையை கருத்தூன்றி கடைப்பிடிக்கக்கூடியவர்கள். இது சுகாதாரம் சார்ந்ததற்கான அல்ல, சமயம் தொடர்பானது. தாங்கள் தூய்மையான இனம் என்ற எண்ணம், யூதர்களுக்கு அதிகமாக இருந்தது. எனவே, பல தூய்மைச்சடங்குகள் அவர்கள் பின்பற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தூய்மைச்சடங்குகளில் இருக்கும் போலித்தனத்தை இயேசு விரிவாக விளக்குகிறார். திராட்சை இரசம் யூதர்களின் உணவில் கலந்துவிட்ட ஒன்று. அந்த திராட்சை இரசத்தை தயாரித்து, மற்றவர்கள் பருக கொடுக்கிறபோது கூட, தூய்மைச்சடங்கு சம்பிரதாயத்தை, இம்மியளவு பிசகாமல் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கண்ணுக்குத் தெரியதாக பூச்சிகள் அதில் இருக்கக்கூடாது என்பதற்காக, அதனை வடிகட்டி மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தளவுக்கு அவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் அவர்களை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர்கள் சம்பிரதாயதச் சட்டங்களை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். அதேவேளையில், அந்த சட்டங்கள் காட்டும் மனித மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது வாழ்ந்தனர். இதனைத்தான் இயேசு ஒட்டகம் என்கிற...

கடவுள் விரும்பும் வாழ்வு

வெளிவேடக்காரர் என்கிற வார்த்தை, சாதாரண வார்த்தையல்ல. அது ஒரு கடினமான வார்த்தை. அது ஒரு மனிதருக்கு இழுக்கு தரும் வார்த்தை. ஒருவரை அவமானப்படுத்தும் வார்த்தை. ஒருவருடைய ஆளுமையைச் சிதைக்கும் வார்த்தை. இப்படிப்பட்ட வார்த்தை, இயேசுவின் வாயிலிருந்து வந்தால், எந்த அளவுக்கு பரிசேயர்களும், சதுசேயர்களும் மோசமான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்பதை, நாம் உணர்ந்து கொள்ளலாம். பரிசேயர்களும், சதுசேயர்களும் வெளியில் நல்லவர் போல நடித்துக்கொண்டிருந்தார்கள். இதிலிருந்து நல்லது எது? தீயது எது? என்பதை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் வெளியில் அனைவராலும் நல்லவர்களாக நடிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தாங்கள் வாழக்கூடிய வாழ்க்கை தெரியாமல் இல்லை. தாங்கள் இருவகையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை மற்றவர்கள் சொல்லி, அவர்கள் அறிய வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களே அறிந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களது வாழ்வில் திருந்தி வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவேயில்லை. இதுதான் இயேசுவின் வேதனைக்கு காரணமாகிறது. நமது வாழ்வை நாம் மாற்றாதபோது, நம்மை விட, கடவுள்...

சோதிக்கும் நோக்கத்துடன் !

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட அறிஞர் ஒருவர் திருச்சட்ட நுhலில் தலை சிறந்த கட்டளை எது என்று கேட்கிறார். கேள்வி நல்ல கேள்விதான். ஆனால், கேட்கிற மனிதரும், அவரது உள்நோக்கமும்தான் சரியில்லை. இருப்பினும், அவரது வாயை அடைக்கவும், இதயத்தைத் திறக்கவும் இயேசு அருமையான பதிலை வழங்குகிறார். இறைவனையும், மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதே தலை சிறந்த கட்டளை. நாம் ஒருவரோடொருவர் உரையாடும்போது நமது கேள்விகளும், மனநிலையும் எப்படி இருக்கின்றன என்று கொஞ்சம் ஆய்வு செய்வோமா? சில வேளைகளில் நலம் விசாரிக்கும் தோற்றத்தில்; பிறரை இகழ, குத்திக்காட்ட நாம் முயல்வதில்லையா? ஆறுதல் சொல்லும் தோற்றத்தில் புண்படுத்துவதில்லையா? ஆலோசனை சொல்லும் சாக்கில் அவதுhறு செய்வதில்லையா? எனவே, நமது கேள்விகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் மனநிலையை, நோக்கத்தை ஆய்வு செய்வோம். நேர்மையாக சிந்தி;க்கவும், பேசவும் செய்வோம். மன்றாடுவோம்: உண்மையின் உறைவிடமே இயேசுவே, என் மனதிலும், நாவிலும் துhய்மையைத் தாரும். உமது துhய ஆவியினால் என்னை நிரப்பும். உள்...

”நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்…” (மத்தேயு 22:4)

கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ”திருமண விருந்து உவமை” ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில்...