Tagged: இன்றைய சிந்தனை

கடவுள் நம்மோடு இருக்கின்றார்

திருப்பாடல் 87: 1 – 3, 4 – 5, 6 – 7 இந்த திருப்பாடல் சீயோனைப் பற்றி சொல்கிற பாடல். சீயோன் செழுமையாக, வளமையாக இருந்த நேரத்தில் ஆசிரியர் இந்த பாடலை பாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு பிண்ணனியும் ஏற்றுக்கொள்வது போல இருக்கிறது. அதன்படி, சீயோன் அதாவது எருசலேம் பகைநாட்டினரால் தகர்க்கப்பட்டபோது, எருசலேமில் இருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டபோது, நம்பிக்கை இழந்த சூழ்நிலை இருந்தது. நம்பிக்கையிழக்காதபடிக்கு வாழ, இந்த திருப்பாடல் அழைப்புவிடுப்பதாகவும் இது பார்க்கப்படுகிறது. இரண்டு பிண்ணனிகளில் நமக்குச் செய்தி தரப்பட்டாலும், இரண்டு பிண்ணனியுமே ஒரே செய்தியைத்தான் தருகிறது. அதுதான் இன்றைய திருப்பாடலின் பல்லவியாகவும் வருகிறது. ”கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்பதுதான் அந்த செய்தி. சீயோன் வளமையாக இருந்தது என்றால், அதற்கு காரணம் கடவுள் அவர்களோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கை. அதேபோல, பகைநாட்டினர் அவர்களை அழித்தொழித்தபோதும், அவர்கள் கவலைப்படாதிருக்க நம்பிக்கையிழக்காதிருக்க அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற...

இறைவன் நம் தலைவர்

இன்றைய நற்செய்தியில் வரிசையாக தங்களுடைய பலவீனங்களை, சீடர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்கிற அதிகாரப்போதை, அவர்களிடையே வாக்குவாதத்தையும், சண்டையையும் ஏற்படுத்துகிறது. அதனைத்தொடர்ந்து, அடுத்தவரைப்பற்றிய இழிவான எண்ணம், குற்றம் கண்டுபிடிக்கிற மனப்பான்மை சீடர்களின் மனதை ஆள்வதாக அமைவதை, நாம் பார்க்கலாம். இதுபோன்ற பல நிகழ்வுகளை நாமும் கூட, நமது வாழ்வில் சந்தித்திருக்கலாம். இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன? என்பதற்கு, இயேசுவின் நற்செய்தி சிறந்த பதிலாக அமைகிறது. கடவுளை நம் முழுமுதற்தலைவனாக ஏற்றுக்கொள்வதுதான், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியாக இருக்கிறது. கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறபோது, நமக்குள்ளாக இருக்கிற பிணக்குகள் அகன்று, நமக்குள்ளாக இருக்கிற வேறுபாடுகள் அற்றுப் போகிறது. அந்த தருணத்தில் நமக்குள்ளாக தெளிந்த சிந்தனை தோன்றுகிறது. அந்த சிந்தனைகள் தாம், நம்மை கடவுள் முன்னிலையிலும், மற்றவர்கள் முன்னிலையிலும் பணிந்து நடக்கச்செய்வதாக அமைகிறது. ஆக, கடவுளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை, நாம் வாயால் அறிக்கையிட்டால் போதாது. நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? இல்லையா? என்பதை, நமது வாழ்வு தான்...

ஆண்டவரைப் புகழ்ந்து போற்றுவார்களாக

திருப்பாடல் 149: 1ஆ – 2, 3 – 4, 5 – 6அ & 9ஆ இஸ்ரயேல் மக்கள் தாவீது அரசரின் காலத்தில் தான், மற்றவர்களால் அஞ்சக்கூடிய ஓர் அரசாக வளர்ந்தனர். சவுல் அரசருடைய காலத்திலேயே இஸ்ரயேல் ஒரு நாடாக வளர ஆரம்பித்தாலும், மற்றவர்கள் பயப்பட ஆரம்பித்தது தாவீது அரசருடைய காலத்தில் தான். தாவீது அரசரின் காலத்தில் ஏராளமான வெற்றிகளை அவர்கள் பெற்றார்கள். எனவே, தாவீது எழுதிய திருப்பாடல்களில் பல பாடல்கள் போர்களில் பெற்ற வெற்றியின் பிண்ணனியில் அமைந்திருக்கும். இந்த பாடலும் அப்படிப்பட்ட பிண்ணனியில் அமைந்த பாடல் தான். கடவுளின் மீட்புச் செயல்களை புகழ்ந்து பாடக்கூடிய பாடலாக இது அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். வாழ்வில் இனிமை கொண்டு இருக்க வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால், இஸ்ரயேல் மக்கள் இந்த உலகத்தைப் படைத்த கடவுளை தங்களின்...

என்றும் வாழும் கடவுள் போற்றி

தோபித்து 13: 2, 3, 6, 7, 8 தோபித்து கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்த ஒரு மனிதர். குறிப்பாக, உடல் ஒவ்வொன்றும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டது. உடலுக்குரிய மதிப்பை வழங்க வேண்டுமென்று, இறந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அவர் செய்யக்கூடிய காரியங்களால் அவருக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும் கூட, அதனைப் பற்றி கவலைப்படாமல் கடவுளைவிடாது பற்றிக்கொண்டவர். அவருடைய வாழ்வில் தான் செய்கிற ஒவ்வொரு செயலும் கடவுளைப் போற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்தார். கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற்றிருக்கிற வரிகளில் வெளிப்படுகிறது. தோபித்தை பொறுத்தவரையில் கடவுள் இரக்கமும், நீதியும் உள்ளவர் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கடவுள் ஒரு மனிதன் செய்கிற செயல்களுக்கு ஏற்ப, நீதி வழங்குகிறவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். கடவுள் எப்போதும்...

திருத்தூதர் மத்தேயு திருவிழா

பின்பற்றியவர் பிரபலமானார் மத்தேயு 9:9-13 இறையேசுவில் இனியவா்களே! திருத்தூதர் மத்தேயு திருவிழா திருப்பலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மத்தேயு என்ற பெயரின் பொருள் “யாவேயின் பரிசு” என்பதாகும். அல்பேயுவின் மகனான மத்தேயு, உரோமை ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். உரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மிகவும் பிரபலமாக மாறுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....