Tagged: இன்றைய சிந்தனை

கடவுள் நம் அனைவரின் தந்தை

கிறிஸ்தவ அன்பில் நாம் வளர வேண்டும் என இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்தவ அன்பு என்றால் என்ன? இயேசு அன்பின் நிறைவிற்கு, முழுமைக்கு கடவுளை உதாரணமாகத் தருகிறார். கடவுள் நல்லவர், தீயவர் என்று பாராமல் அனைவர் மேலும், தனது கதிரவனைப் படரவிடுகிறார். அனைவருக்கும் மழை கிடைக்கச் செய்கிறார். ஒருவன் நல்லவன் என்பதனால் அவனுக்கு ஒன்றும், மற்றவன் கெட்டவன் என்பதால் அவனுக்கு ஒன்றும், கடவுள் செய்வதில்லை. அதுதான் அன்பின் நிறைவு. அந்த அன்பின் நிறைவு தான் கிறிஸ்தவ அன்பு. ஏன் இந்த கிறிஸ்தவ அன்பு நமக்கு கட்டாயம் தேவை? இந்த கிறிஸ்தவ அன்பு நம்மில் இருக்கிறபோதுதான், நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிற தகுதியைப் பெறுகிறோம். கடவுளின் பிள்ளைகளாக, அவரின் உரிமைக்குடிமக்களாக நாம் மாற வேண்டுமென்றால், அதில் நாம் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இந்த கிறிஸ்தவ அன்பு என்பது, இதற்கு மேல் அன்பு என்ற ஒன்று இருக்க முடியாது, என்கிற உணர்வை...

நிறைவோடு வாழ…

பாரசீகர்கள் மத்தியில் செய்திகளைச்சுமந்து செல்வதற்கு வசதியாக ஒரு பழக்கம் இருந்தது. அனைத்து சாலைகளும், பல இலக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. செய்தியைச் சுமந்து செல்கிறவர் குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்று, அதை அந்த இலக்கில் காத்துக்கொண்டிருக்கிறவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் அடுத்த இலக்கிற்கு சுமந்து செல்வார். செய்தியைக் கொண்டுவருகிறவருக்கும், அவருடைய குதிரைக்கும் தேவையான உணவு மற்றும் தங்கிச்செல்ல வசதி, குறிப்பிட்ட இலக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால், அங்கே இருக்கிறவர்கள் அனைத்தையும் அவருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். இதேமுறை, உரோமையர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்த, பாலஸ்தீனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. உரோமை காவலர்கள் தனது ஈட்டியால் யாரையாவது தொட்டால், அதனுடைய பொருள், அவர் உடனடியாக உதவி செய்ய வேண்டும். இயேசு சிலுவை சுமந்து சென்றபோது, சீமோன் உதவி செய்ய வந்தது இப்படித்தான். அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த பிண்ணனியில் தான், இயேசு இந்த செய்தியை நமக்குச்சொல்கிறார். இயேசுவின் செய்தி இதுதான்: மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்திச் செய்யச்சொல்லும் செயலை,...

Peace and Prosperity

“You will keep in perfect peace him whose mind is steadfast, because he trusts in you.” Isaiah 26:3 When our minds are focused on the love of GOD, we experience indescribable tranquility and peace of mind. When you trust GOD during every day, and through every problem, you will be able to enjoy His peace. By focusing on Jesus Christ and the peace and prosperity that He gives, you are set free from worry because you know that God is in control of your life – therefore no person or circumstances can disturb your tranquility. His love enfolds you and...

பொருள் உணர்ந்து வழிபடுவோம்

எந்தவொரு வழிபாட்டுச்சடங்கையும் அதன் பிண்ணனியோடு, பாரம்பரியத்தோடு, வரலாற்றோடு பொருத்திப்பார்த்தால் தான், அதன் பொருளையும், அதில் இருக்கக்கூடிய முழுமையான அர்த்தத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அல்லது, அதை தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்திப்பகுதியின் பிண்ணனி அறிந்து, நாம் வாசித்தால் அதன் ஆழத்தையும், கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வில், நற்கருணை என்றழைக்கப்படும் இயேசுவின் திருவுடல் தரும், தெய்வீக அருளை நாம் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைக்கு, கத்தோலிக்க வழிபாட்டைப் பார்க்கும் எவரும், இயேசுவின் திரு உடலை உட்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை வித்தியாசமாகத்தான் பார்ப்பர். காரணம், ஒரு மனிதனுடைய உடலை உண்ணும் பழக்கம், நமது பண்பாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு மனிதன் தனது சதையை எப்படி மற்றவர்கள் உண்ணக் கொடுக்க முடியும்? ஒரு மனிதனுடைய இரத்தத்தை, மற்ற மனிதர்கள் எப்படி அருந்த முடியும்? அது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? இது போன்ற கேள்விகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் எழும். எவற்றையும் சடங்காகப்...

ஆணையிடுவதும் பலவீனமே

சட்டமியற்றி சமூகத்தின் தீமைகளை, தீயவர்களைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பது இயலாத காரியம். மேலும் மேலும் சட்டங்களை இயற்றினால தீமைகளும் தவறுகளும் தண்டனைகளும் குற்றவாளிகளும் பெருகுவார்களே அல்லாமல் நன்மை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகமாக இல்லை. ஆணையிடுதலும் இதற்குச் சமமானதே. ஏற்கெனவே உள்ள சட்டத்திற்கு இன்னொரு ஊன்றுகோல் தேடுகிறோம். ஆண்டவன் அருளால் நிறைந்த மனிதனுக்கு இப்படி இன்னொரு துணை தேவையில்லை. ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். ஆணையிடுதல், இயலாமையின் அடையாளம். எவ்விதத்திலும் ஆற்றலும் அருகதையும் அந்தஸ்தும் நமக்கு இல்லாத நிலையில் நாம் இன்னொரு உயர்ந்த சாட்சியத்தைத் தேடுவது முறையல்ல. நம்மால் நம் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது; கடவுளின் கால்மனையைக்கூட அணுக முடியாது.இந்த நிலையில் இறைவனை நமக்குச் சான்று பகர அழைப்பதற்கு என்ன தகுதி உள்ளது.இயேசுவின் காலத்தில் ஆணையிட்டுச் சொன்ன இரண்டு பேர் நிறைவேற்ற முடியாமல் போயினர். 1.ஏரோது(14:7), 2. பேதுரு26:72 ஆண்டவனின் மனிதன் ஒரு வார்த்தைக்குள்...