Tagged: இன்றைய சிந்தனை

பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்

இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள். ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற...

தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்

திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24 ”தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” ”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும். ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது...

மாற வேண்டிய வாழ்க்கை முறை

நம்மை நாம் தீர்ப்பிடுவதை விட, அடுத்தவரை நாம் தீர்ப்பிடுவது நமக்கு எளிதானதாக இருக்கிறது. நாம் செய்யக்கூடிய குற்றங்கள் நமக்கு அவ்வளவாக கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அடுத்தவர் செய்யும் குற்றங்கள், அதிலும் குறிப்பாக, யாரை நாம் வெறுக்கிறோமோ அவர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு மிகப்பெரிதாக தெரிகிறது. நாம் சாதாரண நிலையில் இருக்கிறபோது, அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவும், பழிவாங்கவும் நினைக்கிறோம். அதையே செய்கிறோம். அப்படிப்பட்ட அதிகாரவர்க்கத்தினரின் பழிவாங்கலுக்கு பலியானவர் தாம் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆனால், தனக்கு அதிகாரம் இருந்தாலும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன்னுடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவரும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான். இயேசுவின் போதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய வாழ்க்கை முறை. தொண்டாற்ற விரும்புகிறவர் தொண்டனாக இருக்க...

என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 – 33 ”என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்” தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள்...

ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு

திருப்பாடல் 27: 1, 2, 3, 13 – 14 ”ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு” சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார். அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே...