Tagged: இன்றைய சிந்தனை

ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 1a, 4, 5 – 6, 7 – 8 ”ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது” கடவுளைப்பற்றியும், அவரது படைப்பின் மேன்மையைப் பற்றியும் உள்ளத்தில் ஆழமாக சிந்தித்த ஒரு மனிதரின் கூக்குரல் தான், இந்த திருப்பாடல். கடவுள் எந்த அளவுக்கு மாட்சிமையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார் என்பதை, நாம் அவரைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். வெறுமனே படைப்புக்களை மேலோட்டமாக பார்த்தால், கடவுளின் மாட்சிமையை நாம் புரிந்து கொள்ள முடியாது. நேர்த்தியாகப் படைக்கப்பட்ட பறவையினங்கள், விலங்குகள், மரங்கள், அவைகளுக்கு உணவு வழங்கும் விதம், என்று ஒவ்வொன்றையும் நாம் இரசிக்கிறபோது, அதன் அழகைப் பருகுகிறபோது, கடவுளின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம். கடவுளின் ஞானம் மனிதர்களோடு ஒப்பிடப்பட முடியாத ஒன்று. ஒவ்வொன்றையும் அவர் செதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் தந்திருக்கிறார். அது இயல்பாகவே இயங்குவதற்கு ஆற்றல் வழங்கியிருக்கிறார். படைப்புக்களையும், அவற்றின் மேன்மையையும் பேசுகின்ற...

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 (3b) ”ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக” இந்த உலகத்திலே பணத்தைத் தேடுகிற மனிதர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். புகழுக்காக, அதிகாரத்திற்காக, வெற்றுப்புகழ்ச்சிக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில், கடவுளைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள். அவர்களிலும் பலர், தேவைக்காகவே கடவுளைத் தேடுகிறார்கள். கடவுளை தங்களது தேவைகளை நிறைவேற்றித்தரும், ஒரு வல்லமையுள்ளவராகப் பார்க்கிறவர்களே அதிகம். இங்கே, “ஆண்டவரைத் தேடுகிறவர்களாக“ திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, மேற்சொன்ன மனிதர்களை அல்ல. மாறாக, அனைத்தையும் இழந்து, இறைவன் ஒருவர் தான் உண்மை என்று, உண்மையான மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆண்டவரைத்தேடுகிறவர்களையே குறிப்பிடுகிறார். அவர்கள் இறைவனை தேடுவதிலே மகிழ்ச்சி காண வேண்டும் என்பது அவரது அறிவுரையாக இருக்கிறது. கடவுளை நமது வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடுவதுதான் உண்மையான மகிழ்ச்சியையும்,...

அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22 ”அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்” ஆண்டவர் அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார். யாருடைய உயிரை சாவினின்று காக்கின்றார்? ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போரையும், ஆண்டவரது பேரன்பிற்காக காத்திருப்போரையும் அவர் கண்ணோக்குகின்றார். ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் யார்? அவரது பேரன்பிற்காக காத்திருப்பவர்கள் யார்? இங்கு திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களை ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறவர்களாக, ஆண்டவரது பேரன்பிற்காக ஏங்கி நிற்கிறவர்களாக அறிவிக்கிறார். இது இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாறை நினைவுபடுத்தக்கூடிய திருப்பாடல் ஆகும். நாடு முழுவதும் பஞ்சத்தினால் துன்புற்றபோது, எகிப்து மட்டும், யோசேப்பின் முன்மதியால் பஞ்சத்திலிருந்து தப்பியது. இஸ்ரயேல் மக்கள் தானியத்திற்காக எகிப்து வந்தபோது, யோசேப்பு வழியாக கடவுள் அவர்களுடைய பஞ்சத்தைப் போக்குகிறார். ஒருவேளை யோசேப்பு அங்கு இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களின் கதி, பரிதாபமான நிலையாக இருந்திருக்கும். ஆனால், ஆண்டவர் அற்புதமாக அவர்களது பஞ்சத்தைப்...

இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது

திருப்பாடல் 16: 1 – 2a, 5, 7 – 8, 9 – 10, 11 ”இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது” கடவுள் எங்கே இருக்கிறார்? என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளாக எழுகிற இயல்பான கேள்வி. தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அதைத்தான் நாம் மனச்சான்று என்று சொல்கிறோம். நாம் நல்லது செய்கிறபோது, நம்மையறியாமல் நம்மை நினைத்து பெருமைப்படுகின்றோம். நாம் தவறு செய்கிறபோது, அதனை விரும்பிச்செய்தாலும், நமக்குள்ளாக ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதுதான், உண்மையில் கடவுளின் குரல். அதுதான் உண்மையில் இறைவனின் ஒலி. அதைத்தான் இன்றைய திருப்பாடலின் வரிகளும் நமக்கு எடுத்தியம்புகின்றன. தாவீது அரசர் பத்சேபாவுக்கு எதிராக தவறு செய்தார். அதை நிச்சயம் தெரிந்துதான் செய்தார். ஆனால், கடவுளுக்கு தெரியாது என்று நினைத்து செய்தார். அவரது உள்ளம் எச்சரித்திருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது, தவறு...

இயேசு மீண்டும் வருவார்

பாலஸ்தீன நாட்டின் பாரம்பரியப்படி, ஒருவர் இறந்த மூன்றுநாளுக்குப்பிறகு, கல்லறைக்கு அவருடைய உறவினர்கள் சென்று வருவது வழக்கம். ஏனென்றால், முதல் மூன்று நாட்கள் இறந்தவரின் ஆவி கல்லறையைச்சுற்றி வந்து, தன்னுடைய உடலுக்குள் மீண்டும் செல்ல முயற்சி செய்யும் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால், மூன்று நாட்களுக்குப்பின் உடல் அழுகிவிடுவதால், ஆவிக்கு தன்னுடைய உடலை அடையாளம் காணமுடியாமல், தனது உலகத்திற்கு திரும்பிவிடும். வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மகதலா மரியா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள். இன்றைய நற்செய்தியில், யோவான் அங்குத்துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்கு பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து...