எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக
திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20 ஆண்டவர் யார்? ஆண்டவர் எப்படிப்பட்டவர்? என்பதை, இந்த திருப்பாடலானது நமக்கு விளக்கிச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கான காரணத்தை இது விளக்குவதாகவும் இருக்கிறது. இஸ்ரயேல் மக்களை ஒட்டுமொத்தமாக இணைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடச்சொல்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் நாட்டின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆசீர் அளிக்கிறார். கேட்டதால் கொடுக்கவில்லை. மாறாக, அவராகவே ஆசீர்வாதத்தைத் தருகிறார். இஸ்ரயேல் மக்களை எல்லாவிதத்திலும் வழிநடத்தக்கூடிய தலைவராக, அரசராக, ஆயராக இறைவன் இருக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்கென்று இந்த உலகத்தில் அரசர்கள் இருந்தாலும், அவர்களை வழிநடத்துகிறவர் ஆண்டவர் ஒருவரே. அவர் மக்களுக்கு ஒழுங்குமுறைகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறார். இவற்றை அவர் மற்றவர்களுக்குச் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் செய்கிறார். எப்படியாவது இஸ்ரயேல் மக்களை உருவாக்கி, இந்த உலகத்தார் நடுவில் பெருமைப்படுத்தி, அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது...