Tagged: இன்றைய சிந்தனை

எதிர்பார்ப்பின் உலகம்

எதிர்பார்ப்பு என்பது இந்த உலகத்தின் மதிப்பீடு. நாம் ஒருவருடைய உதவியைப் பெறுகிறோம் என்றால், நிச்சயம் அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பார். சாதாரண அரசு அலுவலகங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மக்களின் தேவைகளை சரிசெய்வதற்காக, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறவர்கள். ஆனால் நடப்பது என்ன? சாதாரணமான வேலைக்கும், நாகூசாமல் பெரும்பாலான அரசு ஊழியர்கள், எதையாவது கேட்டே பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆக, எதிர்பார்ப்பு என்பது, சாதாரண வாழ்க்கை நடைமுறையாகி விட்டது. இப்படிப்பட்ட காலப்பிண்ணனியில் வாழும் நமக்கு இயேசுவின் போதனை சற்று எச்சரிக்கையாக அமைகிறது. எதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒன்றை நாம் செய்கிறபோது, அது நமக்கு திரும்பச் செய்ய முடியாத மனிதர்களுக்குச் செய்வதுதான், எதனையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதற்கு சமமானதாக இருக்கிறது. வறியவர்கள், ஏழைகள், சாதாரண நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் எதைக்கொடுத்தாலும், அவர்களால் நமக்கு திரும்ப...

ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 7 – 8, 9 ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாட திருப்பாடல் ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர்க்கு எதற்காக புதியதொரு பாடல் பாட வேண்டும்? பொதுவாக, இஸ்ரயேல் மக்களின் செபமானது, ஏற்கெனவே தொகுத்து எழுதப்பட்ட இறையனுபவத்தின் வரிகளை மீண்டுமாக நினைவுகூர்வது ஆகும். எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, அவர்களை அற்புதமாக விடுவித்தபோது, அவர்கள் சந்தித்த இறையனுபவம் தான், அவர்களுக்கு பாடலாக தரப்பட்டிருந்தது. ஆனால், இப்போது புதியதொரு பாடலைப் பாட ஆசிரியர் அழைப்பு விடுப்பதன் நோக்கம் என்ன? யாவே இறைவன் வரலாற்றில் மட்டும் இல்லை. இன்றும் இருக்கிறார் என்பதை இந்த திருப்பாடல் உணர்த்துகிறது. வழக்கமாக, தெய்வங்களை நாம் வணங்குகிறபோது, அவர்கள் இதுவரை செய்து வந்த அற்புதங்களை நினைவுபடுத்தி, நாம் அவர்களை வழிபடுவோம். யாவே இறைவனைப்பொறுத்தவரையில், அவரது வல்ல செயல்கள் வரலாற்றோடு முடிந்துவிடவில்லை. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திலும் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடிந்து போனது அல்ல, மாறாக, தொடர்ச்சியானது....

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 97: 1, 2ab, 5 – 6, 10, 11 – 12 பூமியில் இருக்கிறவர்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார். கடவுள் ஆட்சி செய்வதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. கடவுளின் ஆட்சியில் யார் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? என்பதையும் அவர் சொல்கிறார். கடவுளின் ஆட்சியில் நேர்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள் நேர்மையாளர். அவர் நேர்மையுடன் ஆட்சி செய்கின்றார். அவர் நேர்மையாளர்களை விரும்புகிறார். அவர்களைப் பாதுகாக்கின்றார். நேர்மையாளர்கள் யார்? மக்களுக்காக வாழ்கிறவர்கள். நீதியோடு நடக்கிறவர்கள். அநீதியை எதிர்க்கிறவர்கள். அதன்பொருட்டு எத்தகைய துன்பம் வந்தாலும், அதனைத் தாங்குவதற்கு வல்லமை படைத்தவர்கள். தாங்கள் வாழ்கிற வாழ்க்கையின் பொருட்டு, பலவற்றை இழந்தவர்கள். மற்றவர்களால் பழிவாங்கப்படுகிறவர்கள். மற்றவர்களால் உதாசீனமாக நடத்தப்படுகிறவர்கள். இவர்களை கடவுள் விரும்புகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க...

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 90: 3 – 4, 12 – 13, 14 & 17 இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இடிந்தகரையில் நடந்து கொண்டிருக்கும் அணு உலைக்கு எதிரான தொடர்போராட்டம், இளைஞர்களின் எழுச்சியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் போராட்டம், தலைநகரையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம், மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் என இதுவரை தமிழகம் கண்டிராத எழுச்சியை மக்கள் பார்த்து, வியந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் உணர்த்தும் மற்றொரு முக்கியமான செய்தி, இன்றைக்கு மக்களுக்கான அரசுகள் இயங்கவில்லை என்பதுதான். இன்றைய திருப்பாடல், ஒரு அரசு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வருகிறது. கடவுளின் அரசு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டும் பாடலாகவும் இது அமைகிறது. கடவுள் நீதியையும், நேர்மையையும் கொண்டு ஆட்சி செய்கிறார். தீமையை வெறுப்போர் அனைவரும் ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் ஆகின்றனர். கடவுள் நீதிக்காகப் போராடுகிறவர்களை வெறுமனே விட்டுவிடவில்லை....

உம் ஆற்றலைவிட்டு நான் எங்கு செல்லக் கூடும்?

திருப்பாடல் 139: 7 – 8, 9 – 10, 11 – 12 இறைவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதுதான் இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் சொல்ல வருகிற செய்தியாகும். நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, நம்மைப்பற்றி நம்முடைய உறவுகள் அறிந்ததை விட, இறைவன் முழுமையாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. ஏனென்றால், ஆண்டவர் எப்போதும் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருக்கிறார். தாவீது அரசர் பத்சேபாவோடு தவறு செய்கிறார். தான் செய்கிற தவறை யாரும் உணராதவாறு, அவருடைய கணவரை கொன்றுவிடுகிறார். அரசர் என்கிற தற்பெருமை, செய்கிற தவறை மற்றவர்களிடமிருந்து மறைத்த செருக்கு அவரிடத்தில் இருக்கிறது. தன்னைப்பற்றி கர்வம் கொள்கிறார். ஆனால், இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக அவருக்கு அழிவின் செய்தியை அறிவிக்கிறார். கடவுள் முன்னிலையில் தாவீது செய்த தவறு அவருக்கு உணர்த்தப்படுகிறது. இதுவரை தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டிருந்த தாவீது...