Tagged: இன்றைய சிந்தனை

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 கடவுளின் மாட்சிமையை, மேன்மையை இயற்கை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதை, இந்த திருப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. படைப்பை நாம் உன்னிப்பாக கவனிக்கிறபோது, பலவற்றை இந்த படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அது ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, கடவுளால் படைக்கப்பட்டிருந்தால், அது எல்லா நாட்களிலும், எல்லா காலங்களிலும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரவிற்கு பின் பகல் என்பது கடவுள் வகுத்த நியதி. இன்று வரை, அதில் மாற்றம் இல்லை. படைப்பு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இயற்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மனிதனும் கடவுளின் படைப்பு தான். ஆனால், மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்? என்பதுதான் ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் இயங்க வேண்டும் என்று கடவுள் எல்லையை வகுத்திருக்கிறார். ஆனால், மனிதன் அப்படி இல்லை. அதனை கடந்து...

தம்மைத் தாமே மீட்டுக் கொள்ள எவராலும் இயலாது

திருப்பாடல் 49: 5 – 6, 7 – 9, 16 – 17, 18 – 19 செல்வத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்கிற மனப்பான்மை மத்திய கிழக்குப் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால், செல்வம் என்பது வெறுமனே உழைத்துப் பெறுவது மட்டுமன்று, அது கடவுளின் கொடை. கடவுளின் கொடை ஒரு மனிதனுக்கு கிடைப்பதால், யாரும் அவனை அழிக்க முடியாது என்று நினைக்கிறான். அந்த நினைப்பு தற்பெருமையாக மாறுகிறது. இப்படிப்பட்ட மனநிலை உள்ள பிண்ணனியில் திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளை எழுதுகிறார். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாருமே மீட்பைப் பெற வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அந்த மீட்பை, கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற நிலைவாழ்வை பெறுவதுதான் நம்முடைய வாழ்வின் இலக்காகக் கொண்டு வாழ்கிறோம். ஆனால், அந்த இலக்கை வெகு எளிதாக செல்வத்தைக் கொண்டு அடைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறோம். ஆனால், கடவுளின் பார்வையில் நல்ல செயல்களைச் செய்வோர்...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 5 – 6 ஆண்டவரின் செயல்களை உயர்ந்ததாக இந்த திருப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆண்டவரின் செயல்கள் எவை? ஆண்டவர் எளியவர்கள் நீதி பெற உழைக்கிறார். தன்னை நம்பியவர்களை கைவிடாது காக்கிறார். ஏழைகள் பக்கமாக நிற்கிறார். அநீதியையும், அநீதி செய்கிறவர்களையும் வெறுக்கிறார். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும், கடவுளையே தங்களின் செல்வமாக ஏற்றிருக்கிறவர்களையும் அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாக்கிறார். கடவுளின் செயல்கள் எப்போதும உயர்ந்தவையாகவே இருக்கிறது. பல வேளைகளில் கடவுளின் செயல்களில் இருக்கிற நீதியை, உண்மையை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பார்வையில் கடவுளின் செயல்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுள் மீது கோபப்படுகிறோம். ஆனால், காலம் நாம் எவ்வளவுக்கு கடவுளைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிநடத்தியபோதெல்லாம், கண்டித்து திருத்தியபோதெல்லாம், கடவுளை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள்....

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 101: 1 – 2a, 2c – 33b, 5, 6 தூய் உள்ளம் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் எதிர்பார்ப்பது ஆகும். இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மிகப்பெரிய பட்டங்களைப் பெற வேண்டும் என்றோ, அதிகாரத்திலும், செல்வச்செழிப்பிலும் வளர வேண்டும் என்றோ கடவுள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. அப்படி வாழ்கிறவர்கள் கடவுளுக்கு மகிழ்ச்சியைத்தரவும் முடியாது. கடவுள் மனிதர்களிமிருந்து விரும்புவது எல்லாம் தூய்மையான உள்ளம். இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் அதனை முழுமையாக உணர்ந்தவராக இந்த பாடலை எழுதுகிறார். திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரையில், ஆண்டவரைப் பற்றிய தவறான பார்வையை வைத்திருந்தார். எதிரி நாடுகளுக்கு எதிராக வெற்றி பெறுவதன் மூலம், கடவுளை மகிழ்விக்க முடியும். எவ்வளவு தவறுகள் செய்தாலும், பலிகள் மூலமும், வெற்றிகள் மூலமும் தன்னுடைய பாவத்தைக் கழுவி விட முடியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அது முற்றிலும் தவறானது என்பதை, வெகு விரைவாகவே உணர்ந்து கொண்டார். அந்த அனுபவப் பாடத்தைத்தான்,...

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9 ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை. நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது....