சக்கேயுவின் தாழ்வு மனப்பான்மை
தாழ்வு மனப்பான்மை என்பது இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் காணப்படக்கூடிய மிக்பெரிய பலவீனமாக நாம் சொல்லலாம். அந்த மனநிலை தான், விளையாட்டு வீரர்கள், சினிமாக நடிகர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவும், சில சமயங்களில் உயிரைக் கொடுக்கவும் தூண்டுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் ஒருவிதமான போதையாகவும் மாறிவிடுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கு, நமக்கு இரண்டு விதமான ஆற்றல்கள் தேவைப்படுகிறது. ஒன்று, நமது முயற்சி. இரண்டாவது கடவுளின் அருள். இந்த இரண்டையும் பெற்று, முழுமையான மனிதனாக, தனது பலவீனங்களை கடந்த மனிதனாக, சக்கேயு உயிர்பெற்று எழுகிறான். சக்கேயுவிற்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. அவனுடைய உயரம் அவனுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அவனது வரிவசூலிக்கும் தொழில் காரணமாக, சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட மனிதனாக காணப்படுகிறான். அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு வெற்றியாக மாறுகிறது. தனது பலவீனத்திலிருந்து மீண்டு வருகிறான். கடவுளின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான். சக்கேயு தனது...