Tagged: இன்றைய சிந்தனை

தூய எண்ணங்களை மனதில் விதைப்போம்

லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள்...

சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார். இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன. இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச்...

கொடுங்கள்! கொடுக்கப்படுவீர்கள்!

இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, மிகப்பெரிய கூட்டம் இயேசுவைத்தேடி வருகிறது. வந்திருந்தவர்கள் அனைவருமே இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள். இன்னும் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவைப் பயன்படுத்துகிறவர்கள். அவர் சொல்வது அவர்கள் உள்ளத்தை சென்றடைந்ததா? இல்லையா? தெரியவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தங்களத தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்திருக்கிறவர்கள் தான். வந்திருக்கிறவர்களில் யாரும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்ததாகத் தெரியவில்லை. உண்மைதான். ஒரு சில தேவைகள் கடவுளால் மட்டும்தான் நிறைவேற்றித்தர முடியும். கடவுள் நமக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர் தான். கடவுளிடமிருந்து மட்டும்தான் நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், கொடுப்பதும் அன்பின் அடையாளம் தான். இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைப் பெற்றிருந்தும், இயேசுவுக்கு துன்பம் வந்தபோது, அவரோடு யாரும் இல்லை. இது, இயேசுவை மற்றவர்கள் வெறுமனே பயன்படுத்தினார்கள் என்பதாகத்தான் நாம் எண்ண முடியும். இன்றைக்கு ஆலயத்திற்கு எத்தனையோ பேர் வருகிறோம். வருகிற அனைவருமே, கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வருகிறோமே ஒழிய, கடவுளுக்கு...

இருளில் ஒளியென மிளிர்வர்

திருப்பாடல் 112: 4 – 5, 6 – 7, 8 – 9 யார் இருளில் ஒளியென மிளிர்வர்? திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்: நீங்கள் கடவுளுக்கு பயந்து வாழ்கிறபோது, இருளில் ஒளியாக மிளிர்வீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களில் பெரும்பாலானோர் ”பத்தோடு ஒன்று பதினொன்று” ரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு முக்கியமான காரணம், அப்படி வாழவில்லை என்றால், இந்த உலகத்தை விட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் தான். இந்த உலகம் தனக்கென ஒரு சிலவற்றை மதிப்பீடுகள் என்ற பெயரில் வைத்திருக்கிறது. ஆனால், அவை கடவுள் பார்வையில் அநீதியானவை. இந்த உலக மதிப்பீடுகளை வாழ்கிறவர்கள், நிச்சயம் கடவுள் பயம் இல்லாதவர்கள். அதனால் தான், அவர்களால் துணிவோடு மற்றவர்களின் உயிரை எடுக்க முடிகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணமுடிகிறது. மற்றவர்களின் பொருளைச் சுரண்ட முடிகிறது. இப்படியாக, கடவுள் பயம் இல்லாத உள்ளத்தில்,...

பணிவாழ்வில் ஓய்வு

திருத்தூதர்கள் தங்களின் நற்செய்திப்பணி முடிந்து திரும்பி வருகின்றனர். இயேசு அவர்களை ஓய்வெடுப்பதற்கு பணிக்கிறார். ஏற்கெனவே களைப்பாய் இருந்தவர்கள் உண்பதற்கு கூட நேரம் இல்லாதவர்களாய் இருப்பதைப்பார்த்து, இயேசுவே அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறார். அவர்கள் ஓய்வுக்கு நேரம் கொடுக்கிறார். நமது கிறிஸ்தவ வாழ்வு என்பது பணியும், ஓய்வும் கலந்த வாழ்வு என்பதை இயேசு இங்கே கற்றுத்தருகிறார். கடவுளின் பணிக்காக முழுமையாக நம்மை அர்ப்பணித்து தொடர்ந்து உழைக்கிறோம். அதேபோல ஓய்வுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். இங்கே ஓய்வு என்பது உடல் சார்ந்த களைப்பிலிருந்து விடுபடக்கூடியது மட்டும் அல்ல. மாறாக, நமது அர்ப்பணத்தை இன்னும் அதிகமாக்குவதற்கான ஒரு கால அவகாசம். ஒரு சுய ஆய்வு. நமது ஆன்மீக வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்பதற்கான ஒரு ஆய்வு. நமது வாழ்வை கடவுளுக்கு இன்னும் ஆழமாக அர்ப்பணமாக்குவதற்கான ஒரு முயற்சி. எந்த அளவுக்கு நம்மையே வருத்தி பணிசெய்கிறோமோ, அதே அளவுக்கு கடவுள் முன்னிலையில் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக இருந்து,...