நான் எதற்கும் அஞ்சிடேன்
அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் (திருப்பாடல் 23: 1) நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11)விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று சிக்கலான பிரச்சனையும்...