இறைவனின் குரல்
2 அரசர்கள் 24: 8 – 17 பாபிலோனி வரலாற்றை மாற்றி எழுதிய மிகச்சிறந்த அரசர் உண்டென்றால், நிச்சயம் அது நெபுகத்நேசராகத்தான் இருக்க முடியும். யோயாக்கின் அரசனின் நான்காவது ஆண்டு ஆட்சியில், இந்த படையெடுப்பு நிகழ்ந்தது. அது நெபுகத்நேசரின் முதலாவது ஆண்டு ஆட்சி. தன்னுடைய தந்தை இறந்ததால், படைப்பொறுப்பை ஏற்று, தன்னுடைய எல்கையை விரிவுபடுத்தத் தொடங்கினார். அவருடைய படை, தனக்கு கப்பம் கட்டும் நாடுகளின் படைவீரர்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய படையாக இருந்தது. நெபுகத்நேசர் யூதாவிற்கு எதிராக வெற்றி பெற்றாலும், அது அவர் பெற்ற வெற்றியாக யூதர்கள் கருதவில்லை. மாறாக, அது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த வெற்றியாகவே கருதினர். இஸ்ரயேல் மக்கள் எதற்காக, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் வெற்றியை, ஆண்டவர் அவர்களுக்கு அளித்த வெற்றியாக கருதினர்? 2அரசர்கள் புத்தகத்தில்(24: 1, 2) பார்க்கிறோம்: “அவனது ஆட்சிக்காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின் மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு...