Tagged: இன்றைய சிந்தனை

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19, 22 எருசலேம் என்று இங்கே குறிப்பிடப்படுவது இஸ்ரயேல் மக்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா மேன்மை மிகு செயல்களையும் ஆசிரியர் சொல்கிறார். இஸ்ரயேல் மக்களை மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப்பேசுகிறார். மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப் பேசுகையில், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்திருப்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். இஸ்ரயேல் மக்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். பகைநாட்டினரிடமிருந்து அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தியிருக்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளையெல்லாம் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வழியாக, கடவுள் எவ்வளவுக்கு மேன்மைமிக்கவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இதை கடவுள் செய்தார். ஆனால், கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், அதற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, பாவம் செய்தார்கள். கடவுளை தங்களது செயல்களால் பழித்துரைத்தார்கள். இப்படிப்பட்ட...

துணிவோடு வாழ…

கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணிவு முக்கியம். அந்த துணிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், என்று துணிவோடு வாழ அழைப்பதுதான் இன்றைக்கு நாம் வாசிக்கிற நற்செய்தி நமக்குத்தருகிற செய்தியாக இருக்கிறது. பல வேளைகளில் நம் கண்முன்னால் அநீதி நடக்கிறபோது, நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிச்செல்கிறோம். விவேகமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு. நமது பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கிறோம். நமது கடமையை நாம் செய்யத்தவறுகிறோம் என்பதுதான் இதனுடைய அர்த்தமாக இருக்க முடியும். இயேசு தனது போதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் எது தவறு என்பதை அவர் அறிந்தாரோ, அதனைத்துணிவோடு எதிர்த்து நின்றார். எது சரி என்று அவர் நினைத்தாரோ, அதனைத் துணிவோடு செய்தார். ஆக, தவறை, தவறு என்று சுட்டிக்காட்டுவதற்கும், சரியை, சரி என்று செய்வதற்கும், அவருக்கு துணிவு இருந்தது. அந்த துணிவு நமக்கும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் தவறு என்பது தெரிந்தும், நாம்...

இறையனுபவம்

1அரசர்கள் 19: 9, 11 – 16 இன்றைய வாசகம் “இறையனுபவம் என்றால் என்ன?“ என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக பல இடங்களுக்கு, பல இலட்சங்களை செலவு செய்து மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இறைவனை அந்த இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியுமா? இங்கே தரிசிக்க முடியுமா? என்று அங்கலாயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைதியில் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார், அமைதியில் தான் இறைவனை அனுபவித்து உணர முடியும் என்பது இன்றைய வாசகத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் தன்னை எலியா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே, ”வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!” என்று சொல்கிறார். சுழற்காற்று எழும்புகிறது. அதில் ஆண்டவர் இல்லை. காற்று பிளந்து பாறைகளைச் சிதறடிக்கிறது. அதிலும் இறைவன் இல்லை. இறுதியாக, அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதில் தான், இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக, கோடி கோடியாக செலவழித்துக் கட்டும் ஆலயங்களிலோ, சடங்கு,:...

இறைவன் தரும் ஆசீர்வாதம்

1அரசர்கள் 18: 41 – 46 நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம். பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை...

இறைவாக்கினர் எலியா கொண்டிருந்த விசுவாசம்

1அரசர்கள் 18: 20 – 39 இறைவன் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரைப் பற்றிய இன்றைய வாசகம் நமக்கு எடுத்தியம்புகிறது. அவர் தான் இறைவாக்கினர் எலியா. யார் உண்மையான இறைவன்? இது தான், போட்டிக்கான கேள்வி. ஆண்டவரா? அல்லது பாகாலா? இறைவன் எவ்வளவோ நன்மைகளையும், வல்ல செயல்களையும் செய்தாலும்,ஒரு கட்டத்தில் மக்கள், இறைவனை மறந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிச்சயம், இந்த நிலை எலியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வருந்தி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விசுவாசத்திற்கு மீண்டும் அழைத்து வர வேண்டியது அவருடைய கடமை என்பதை உணர்கிறார். அதற்காக, எத்தகைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். அங்கு நடந்த நிகழ்வில், ஆண்டவர் தான் உண்மையானவர் என்பது உணர்த்தப்படுகிறது. தன்னுடைய வேண்டுதல் கேட்கப்படுமா? இறைவன் பலியை ஏற்றுக்கொள்வாரா? என்றெல்லாம், எலியா சந்தேகம் கொள்ளவில்லை. அதைப்பற்றிய எள்ளளவும் கவலையும் இல்லை. தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய மன்றாட்டுக்கு இறைவன்...