Category: இன்றைய வசனம்

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10

ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 11:25

ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்: குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 11:25

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:2,3

முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:2,3

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 5:35

வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 5:35

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25

ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:25